புதிய முயற்சி: கிளான்ஸ் லாக் ஸ்கிரீன்- குறைந்த நேர செலவில் துல்லியமான செய்திகள்

|

ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். வேகமாக முன்னேறும் உலகத்தில் நாமும் சற்று வேகமாக ஓட வேண்டிய தேவையில் உள்ளோம். தனிநபர் முன்னேற்றம் என்பதில் அப்போதைய உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்வது என்பது அத்தியாவசியமாக திகழ்கிறது. ஸ்மார்ட் போனில் செய்தி, பயன்பாடுகள், வெப் பிரவுசர், வீடியோக்கள் மற்றும் மல்டி மீடியோ உள்ளடக்கத்தின் பிற வடிவங்கள் வழியாக கிடைக்கும் தகவல்கள் நம்மை உலகத்தோடு இணைத்து வருகின்றன. ஆயிரம் தான் விரல் நுணியில் உலகம் என்றாலும் சரியான நேரத்தில் சரியான மற்றும் துல்லியமான நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்கு நம்பகமான செய்தி சேவையை கண்டுபிடிப்பது ஒரு கடினமான பணியாகும்.

புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் செய்திகள்

புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் செய்திகள்

ஒரே நிகழ்வுகளை வெவ்வேறு மாதிரியான கருத்துக்களில் நாம் தெரிந்துகொள்வதால் குழப்பம் அடைந்துவிடலாம். அதை தவிர்க்கும் வகையிலான ஒரு தளத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சற்று தனித்துவமாக திகழ்வது ஸ்மார்ட் போன் லாக் ஸ்கிரீனில் இருக்கும் போது மல்டிமீடியா மற்றும் செய்தி மேற்கோள்களை காட்டுவதே ஒரே தீர்வாக திகழ்கிறது. நாள் முழுவதும் முக்கியமான செய்திகளை மிகவும் துல்லியமாக வழங்குவதன் மூலம் உலகத்துடன் நம்மை இணைத்து வைக்க இது உதவுகிறது. காண்போர்களை மகிழ்விக்கும் கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களுடன் இணைப்பதன் மூலம் சிக்கலான கட்டுரைகளில் இருந்து நமது பார்வையை எளிதாக்குகிறது.

லாக் ஸ்கிரீனில் இருக்கும் போதே செய்திகள்

லாக் ஸ்கிரீனில் இருக்கும் போதே செய்திகள்

உங்கள் தொலைபேசியின் லாக் ஸ்கிரீனில் முக்கியமான செய்திகளை அணுகவும், முக்கியமான செய்தி விளக்கங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இது விளங்குகிறது. அதேபோல் மற்ற செய்தி பயன்பாடுகளில் நீங்கள் வழக்கமாக செலவிடும் நேரத்தையும் குறைக்கிறது, அதாவது சாதனத்தைத் திறத்தல்> செய்தி பயன்பாடுகளைத் திறத்தல்> செய்தி வகைகளைத் தட்டுதல்> செய்தி உருப்படிகள்> அறிந்து கொள்ளுதல். உங்கள் தொலைபேசியின் லாக் ஸ்கிரீன் மோடிலேயே அன்றைய அனைத்து முக்கியமான செய்தி உள்ளடக்கங்களையும் அறியலாம்.

பொன் போன்ற நேரத்தை மிச்சப்படுத்த முயற்சி

பொன் போன்ற நேரத்தை மிச்சப்படுத்த முயற்சி

முக்கிய செய்திகளை கையாளும் வகையில், எல்லாவற்றையும் ஒரே திரையில் காண்பிக்கும் மற்ற பயன்பாடுகளை போல் இல்லாமல், செய்தி நுகர்வுக்கு விஷயங்களை எளிதாக்கும் வகையில் க்ளான்ஸ் லாக் ஸ்கிரீன் சேவை எளிய மற்றும் பயனுள்ள வடிவத்தை பின்பற்றுகிறது. உங்கள் தொலைபேசி லாக் ஸ்கிரீனில் இருக்கும் போதே, தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் துல்லியமான தகவல்களை க்ளான்ஸ் வழங்குகிறது. ஒரே நேரத்தில் ஒரு செய்தியை வழங்க, முழு மொபைல் திரையையும் க்ளான்ஸ் பயன்படுத்துகிறது, இதன்மூலம் எளிதான புகைப்படத்தின் மூலம் செய்தியின் தன்மையை நம்மால் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

மேலும் இது செய்தி வாசிப்பை சுவாரஸ்யமாக்குகிறது மற்றும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக்குகிறது. குறிப்பாக, செங்குத்து வீடியோ வடிவமைப்பை க்ளேன்ஸ் வழங்குவதன் மூலம் பார்வையாளர்களை அந்த செய்தியின் தன்மை குறித்து மகிழ்விக்கிறது. உங்கள் சாதனத்தைத் ஓபன் செய்யாமல், உங்கள் தொலைபேசியின் லாக் ஸ்கிரீனிலேயே முக்கியமான செய்தி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.

முக்கியமான செய்திகள் துல்லியமாக

முக்கியமான செய்திகள் துல்லியமாக

முக்கியமான செய்திகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பார்வையாளர்கள் உலக நடப்புகளை தெரிந்துகொள்வதோடு அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. உங்கள் கவனத்தை ஈர்க்க க்ளிக் பேட் மற்றும் போலி தலைப்புடனான செய்திகளைப் பயன்படுத்தும் மற்ற டிஜிட்டல் செய்தி தளங்களைப் போல் இல்லாமல், சரிபார்க்கப்பட்ட உண்மைகளை மட்டும் க்ளான்ஸ் வழங்குகிறது, மேலும் பரபரப்பான தலைப்புச் செய்திகளை தவிர்த்துவிட்டு, லாக் ஸ்கிரீனில் தோன்றும் ஒவ்வொரு செய்தியும் உயர்தர செய்தித் தரங்களை வழங்கும் வகையில் நிறுவனம் பல சோதனைகளை செய்கிறது. இதன்மூலம் தங்களின் நேரத்தை மிச்சுப்படுத்துவதோடு தெளிவான செய்திகள் மட்டுமே பெரும்வகையில் உள்ளது.

மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய செய்தி அனுபவம்

பயனர்களின் அனுபவத்திற்காக ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் செய்திகள் காண்பிக்கப்படுகிறது. மேலும் பிற மொழிகளுக்கான ஆதரவு 2020 முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

உங்கள் தொலைபேசியின் லாக் ஸ்கிரீனில் இயங்குவதற்கு கிளான்ஸ் மிகவும் உகந்ததாக உள்ளது. பெரிய அளவிலான தரவை உட்கொள்ளாமல் சிறந்த கதைகளை வழங்க க்ளான்ஸின் வடிவம் உகந்ததாக உள்ளது.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிளான்ஸ் லாக் ஸ்கிரீன் சேவை கிடைக்கிறது. சியோமியின் ரெட்மி நோட்-சீரிஸ் கைபேசிகள், சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ், எம்-சீரிஸ், விவோ ஸ்மார்ட்போன்கள் போன்றவைகளில் முன்னதாகவே இந்த கிளான்ஸ் நிறுவனம் சேவை புரிந்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Smartphones perform an excellent job of keeping us informed on-the-go. They connect us to the world with a constant flow of information via news applications, web browsers, videos, and other forms of multimedia content.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X