Home
Mobile

அறிமுகம் : 16எம்பி செல்பீ கேம்; 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஜியோனி எக்ஸ்1எஸ்.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் பிளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

By Muthuraj

கடந்த மாதம் எக்ஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பின்னர், ஜியோனி நிறுவனம் இப்போது அதன் எக்ஸ்1எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம் : 16எம்பி செல்பீ கேம்; 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட  எக்ஸ்1எஸ்.!

ஒரு கைரேகை சென்சார், ஒரு பெரிய பேட்டரி திறன், சிம் மற்றும் சேமிப்புத்திறனுக்கான மூன்று தனி இடங்கள் மற்றும் ஒரு செல்பீ-மையப்படுத்தப்பட்ட கேமரா ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ள ஜியோனி எக்ஸ்1எஸ் ஸ்மார்ட்போன் ரூ.12,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்று வருகிற வியாழக்கிழமை (செப்டம்பர் 21) முதல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

அறிமுக சலுகைகள்

அறிமுக சலுகைகள்

ஜியோனி எக்ஸ்1எஸ் சாதனத்திற்கும் எக்ஸ்1 போன்ற அறிமுக சலுகைகள் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி (அல்லது அதற்கு மேற்பட்ட) திட்டங்களை ரீசார்ஜ் செய்ய மாதத்திற்கு கூடுதலாக 10ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இது தொடர்ச்சியான 6 ரீசார்ஜ்களுக்கு செல்லுபடியாகும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கீழே பதிக்கப்பட்டுள்ள ஒரு புதிய பின்புற ஸ்பீக்கர் கிரில் தவிர, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது வடிவமைப்பில் எக்ஸ்1 போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சற்றே பெரிய 5.2 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மெமரி

மெமரி

3ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737டி செயலி மூலம் இயக்கப்படும் இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான அமீகோ 4.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் பிளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பியூடிப்பைஃடு வீடியோ

பியூடிப்பைஃடு வீடியோ

ஜியோனி எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற 8 மெகாபிக்சல் சென்சாரை பொறுத்தவரை இதுவொரு சிறப்பான மேம்பாடாகும். மேலும் எக்ஸ்1எஸ் ஆனது பியூடிப்பைஃடு வீடியோ மற்றும் ஃபேஸ் பியூட்டி 2.0 போன்ற சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஜியோனி எக்ஸ் 1 ஸ்மார்ட்போனின் 3000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்பிடும்போது, எக்ஸ்1எஸ் ஆனது ஒரு பெரிய 4000எம்ஏஎச் கொண்டுள்ளது. இரட்டை சிம் அட்டைகள் மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஆகிய ஆதரவுகளுடன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களையும் ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Gionee X1s With 16-Megapixel Selfie Camera, 4000mAh Battery Launched in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X