Home
Mobile

3000எம்ஏஎச் பேட்டரியுடன் ஜியோனி எக்ஸ்1 (விலை மற்றும் அம்சங்கள்).!

ஜியோனி எக்ஸ்1 ஆனது 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் 3000எம்ஏஎச் பேட்டரியானது முழு நாள் ஒரு பேட்டரி ஆயுள் வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது.

By Muthuraj

ஜியோனி இந்தியா புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வப்போது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கொண்டுள்ள ஜியோனி நிறுவனம் தற்போது அதன் ஜியோனி எக்ஸ்1 ஸ்மார்ட்ப்பனை அறிவித்துள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி அமைப்போடு வருகிற இந்த ஸ்மார்ட்போன் முன்னணி ஸ்மார்ட்போன் சில்லறை கடைகளில் ரூ.8,999/- என்ற விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது - கருப்பு மற்றும் தங்கம், மற்றும் இரண்டு வண்ண மாறுபாடுகளுமே கடைகளில் கிடைக்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இந்த புதிய ஜியோனி எக்ஸ்1 ஆனது 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் 3000எம்ஏஎச் பேட்டரியானது முழு நாள் ஒரு பேட்டரி ஆயுள் வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

மேலும் ஜியோனோ எஎக்ஸ்1 ஆனது ஒரு உள்ளுணர்வு கைரேகை சென்சார் கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கைரேகை சென்சார் ஆனது பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பிற்கு பொறுப்பாகாது, எனவே தனிப்பட்ட பாதுகாப்பு முறைமைகளை கையாள நிறுவனம் பரிந்துரை செய்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரேம்

ரேம்

256 ஜிபி வரை வெளிப்புற எஸ்டி அட்டை மூலம் மெமரி விரிவாக்க ஆதரவு கொண்டுள்ள இக்கருவி 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட 2ஜிபி ரேம் உடனான 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஒரு எஸ்டி கார்ட் ஸ்லாட் சேர்த்து மொத்தம் மூன்று ஸ்லாட் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 8 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வருகிறது. செல்பீ பிரியர்களுக்கு ஜியோனோ எக்ஸ்1 சாதனத்தின் 1.12 எம்?பிக்சல் - இரவில் கூட ஆச்சரியமான செல்பீக்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதாவது குறைந்த ஒளி நிலைகளில் கூட மிகச்சிறந்த மற்றும் தெளிவான புகைப்படங்களை வழங்கும்.

ஆதரவு

ஆதரவு

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான அமிகோ 4.0 யூம்ஐ கொண்டு இயங்கும் இக்கருவி பயனர்களுக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆதரவுகளை வழங்குகிறது.

சலுகைகள்

சலுகைகள்

ஏர்டெல் மற்றும் பேடிம் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்துள்ள ஜியோனி இந்தியா அதன் ஜியோனி எக்ஸ்1 ஸ்மார்ட்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத காலம் 10ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கிடைக்கும். மறுகையில் பேடிஎம் ஆனது ரூ.350/ மற்றும் ரூ.250/- என்ற இரண்டு கேஷ்பேக் வவுச்சர்களை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Gionee X1 launched with 4G VoLTE support 3000mAh battery at Rs 8999. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X