விரைவில் : 6 ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஜியோனி டபள்யு919 ஃபிளிப் போன்.!
ஜியோனி டபள்யு919 ஃபிளிப்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்தஃபிளிப் போன்.
விரைவில் ஜியோனி நிறுவனம் புதிய ஜியோனி டபள்யு919 ஃபிளிப் போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது, மேலும் இந்த டபள்யு919 ஃபிளிப் போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஜியோனி டபள்யு919 ஃபிளிப் போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் அடுத்த வருடம்து வகத்தில் இநத ஃபிளிப் போன் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த டபள்யு919 ஃபிளிப் போன் மாடல்.

டிஸ்பிளே:
இக்கருவி 4.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஜியோனி ஃபிளிப் போன் மாடல். மேலும் 230 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது இந்த ஃபிளிப் போன்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஜியோனி டபள்யு919 ஃபிளிப்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0
நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்தஃபிளிப் போன்.

நினைவகம்:
இந்த ஃபிளிப் போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஃபிளிப்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ஜியோனி டபள்யு919 ஃபிளிப்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications