Just In
- 9 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 9 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 9 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 10 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தட்டித் தூக்கலாமா?- ரூ.10,600 மட்டுமே: 6ஜிபி ரேம், டிரிபிள் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஜியோனி டிஐ13!
ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனானது டிரிபிள் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஜியோனி டிஐ13 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்
ஜியோனி நிறுவனம் சீனாவில் ஜியோனி டிஐ13 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த சாதனம் மீடியாடெக் செயலியை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த சாதனம் பெரிய பேட்டரி, டிரிபிள் கேமரா அமைப்பு சென்சார்கள் மற்றும் பலவற்றை கொண்டிருக்கிறது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட்போனானது சாதாரண பயன்பாடுக்கு உபயோகிப்பவர்களுக்கு தகுந்த மேம்பட்ட சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனானது டிரிபிள் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதி
ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் செல்பி கேமரா சென்சாருக்கு என முன்புற பேனலின் மையத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு இருக்கிறது. ஸ்மார்ட்போனானது மீடியா டெக் ஹீலியோ பி60 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு
இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த விலை வரம்பில் கிடைக்கும் 6 ஜிபி ரேம் சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியா டெக் ஹீலியோ பி60 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த விலை வரம்பில் கிடைக்கும் சிறந்த சாதனமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

16 எம்பி பிரதான கேமரா
இந்த ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஆதரவுக்கு என 16 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென 8 எம்பி கேமராவை கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட்
அதேபோல் ஜியோனி டி13 சாதனமானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை கொண்டிருக்கிறது. இது டூயல் சிம் கார்டு ஆதரவோடு பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த சாதனம் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனின் விலை
ஜியோனி டிஐ13 ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் 899 சிஎன்ஒய் என அறிமுகமாகியுள்ளது. இதன் இந்திய மதிப்பு ஆனது ரூ.10,600 ஆக இருக்கிறது. மேலும் உயர்நிலை மாடலான 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை தோராயமாக இந்திய மதிப்புப்படி ரூ.12,900 ஆக இருக்கிறது. இந்த சாதனம் சீனாவில் ஜேடி.காம் மூலமாக விற்பனை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா?
ஜியோனி டிஐ 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. பிராண்ட் ஜியோனி எம்15-ஐ இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை, இதுகுறித்த தகவலும் எதுவும் இல்லை. ஜியோனி மேக்ஸ் ப்ரோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கடைசி போன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜியோனி டி13 ஸ்மார்ட்போனானது இந்த விலைப்பிரிவில் இதே வேரியண்ட் உடன் அறிமுகமானால் இந்த சாதனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
File Images
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470