விரைவில் : 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ்.!
ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் பொறுத்தவரை 5000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
தற்சமயம் ஜியோனி நிறுவனம் ஜியோனி எம்7 மற்றும் ஜியோனி எம்7 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதைத்தொடர்ந்து கூடிய விரைவில் ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் ஜிஎன்5007 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ்:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

டிஸ்பிளே:
ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் கேமரா:
ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் இதன் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ்:
ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் பொறுத்தவரை 5000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதன்பின் ரூ.19,750 வரை இந்த ஸ்மார்ட்போன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications