ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்டீல் 2.!
இந்தியாவில் எப்போது வெளியாகினாலும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது போல பல டாப் அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது
ஜியோனி நிறுவனம் அதன் ஸ்டீல் 2 ஸ்மார்ட்போனை சுமார் ரூ.13,000/- என்ற விலைக்கு சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோனி ஸ்டீல் 2 கருவியானது, சீனாவில் முன்பதிவுகளுக்கான தற்போது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர்களில் இப்போது கிடைக்கிறது.
இதுவரை, இந்த் புதிய ஜியோனி ஸ்டீல் 2 அக்கருவி எப்போது சர்வதேச சந்தையில் கிடைக்குமென்ற உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் கூட, இந்தியாவில் எப்போது வெளியாகினாலும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது போல பல டாப் அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது. ரூ.13,000/- என்ற விலை நிர்ணயம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவியில் என்னென்னெ அம்சங்கள் உள்ளன என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.

டிஸ்ப்ளே, ரேம், செயலி
இந்த புதிய ஜியோனி ஸ்டீல் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) 293பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது உடன் 3ஜிபி ரேம் இணைந்த ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் (எம்டி6737) செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மெமரி, சிம், 4ஜி
16 ஜிபி மற்றும் 32 ஜிபி வரை என்ற இரண்டு உள்ளடங்கிய சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும் இந்த கருவியில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் (128ஜிபி வரை) உண்டு. உடன் கைபேசியில் இரட்டை மைக்ரோ சிம் அட்டைகள் மற்றும் வோல்ட் 4ஜி ஆதரவும் உண்டு.

ஆண்ட்ராய்டு, பேட்டரி
ஜியோனி ஸ்டீல் 2 கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான நிறுவனத்தின் அமிகோ 3.5 யூஸர் இன்டர்பேஸ் கொண்டு இயங்கும். மற்றும் முக்கிய அம்சமாக கைபேசியின் நீக்கமுடியாத 4000எம்ஏஎச் பேட்டரி திறன் திகழ்கிறது.

கேமரா, அளவீடு
கேமரா துறையை பொருத்தமட்டில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. அளவீடுகளில் 144.3x70.5x8.6எம்எம்மற்றும் 160 கிராம் எடை கொண்டுள்ளது.

எம்2017
ஜியோனி நிறுவனம் அதன் பிரீமியம் கருவியான எம்2017 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அதன் 2016-ஆம் ஆண்டை நிறைவு செய்தது மற்றும் சுமார் ரூ.68,400/- விலை கொண்ட அக்கருவியின் உள்ளே இரண்டு 3500எம்ஏஎச் பேட்டரிகள் (மொத்தம் 7000எம்ஏஎச்) இருப்பதும் மற்றும் அது பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரிக்கிறது என்பதும் தான் எம்2017 கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதர எம்2017 சிறப்பம்சங்கள்
- 5.7-அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்சல்கள்) கர்வுடு எட்ஜ்ஸ் கொண்ட அமோஎல்இடி
- நீலக் கல் கிளாஸ்
- 518பிபிஐ பிக்சல் அடர்த்தி அடங்கும்
- 6ஜிபி ரேம்
- ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான அமிகோ 3.5 பயனர் இடைமுகம்
- பின்பக்கமாக இரட்டை கேமரா அமைப்பு (12 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல்)
- செல்பீ களுக்கான 8 மெகாபிக்சல் கேமரா

மேலும் படிக்க
5100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட லெனோவா பி2 - விலை & அம்சங்கள் என்ன.?


Click it and Unblock the Notifications