விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.!
விரைவில் நான்கு கேமரா அம்சங்களுடன் ஜியோனி எஸ்11 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோனி.
தற்சமயம் ஜியோனி நிறுவனம் ஜியோனி எம்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, விரைவில் நான்கு கேமரா அம்சங்களுடன் ஜியோனி எஸ்11 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் டூயல் சிம் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் 3600எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications