Home
Mobile

6 இன்ச் டிஸ்ப்ளே; 16எம்பி கேம் உடன் தரப்படுத்தல் தளத்தில் ஜியோனி எஸ்11.!

பட்டியலின்படி, ஜியோனே எஸ்11 ஆனது அம்சங்களை பொறுத்தமட்டில், ஜியோனி எம்7 மற்றும் ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் போலவே உள்ளது.

By Muthuraj

ஜியோனி நிறுவனம் தொடர்ச்சியான ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தை நிகழ்த்தப்போவது போல தெரிகிறது. ஆம், சமீபத்தில் ஜியோனி எம்7 மற்றும் ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து இப்போது, மற்றொரு ஜியோனி ஸ்மார்ட்போன் ஆனது ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் காணப்பட்டுள்ளது.

6 இன்ச் டிஸ்ப்ளே; 16எம்பி கேம் உடன் தரப்படுத்தல் தளத்தில் ஜியோனி எஸ்11

ஜியோனி ஸ்11 என லேபிளிடப்பட்டுள்ள இந்த சாதனம், ஆண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தல் சாதனமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோனி எஸ்11

ஜியோனி எஸ்11

தரப்படுத்தல் தளத்தில் காணப்படும் இந்த சாதனத்தின் அம்சங்கள் இது விரைவில் வெளியாகும் என்பதை உணர்த்துகிறது. பட்டியலின்படி, ஜியோனி எஸ்11 ஆனது அம்சங்களை பொறுத்தமட்டில், ஜியோனி எம்7 மற்றும் ஜியோனி ஸ்டீல் 2 பிளஸ் போலவே உள்ளது.

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்ப்ளே

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 2160 × 1080 பிக்ஸல் திரை தீர்மானம் கொண்ட 6 இன்ச் அளவிலான முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 18: 9 என்ற விகிதம் கொண்டுள்ள இயக்கருவி ஃபுல்வியூ டிஸ்பிளே கொண்டிருக்குமா என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை.

மெமரி நீட்டிப்பு

மெமரி நீட்டிப்பு

மேலும் கூறப்படுகி இந்த ஜியோனி எஸ்11 ஆனது, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் உடனான மாலி- ஜி71 ஜிபியூ உடன் இணைந்த மீடியா டெக் எம்டி6763 செயலி மூலம் இயங்கும். 4ஜிபி அளவிலான ரேம் கொண்டுள்ள இந்த சாதனம் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பையும் வழங்கும். மெமரி நீட்டிப்பு சார்ந்த வார்த்தைகள் ஏதும் இல்லை.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

மென்பொருளைப் பொறுத்தவரை, எஸ்11 ஆனது நிறுவனத்தின் அமிகோ உடனான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குமென பட்டியலிடப்பட்டுள்ளது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதன் பின்புற கேமராவானது, ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ், பேஸ் டிடெக்ஷன் அம்சம், எச்டிஆர பயன்முறை போன்ற அம்சங்களுடன் வரும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மொத்தம் நான்கு கேமராக்கள்

மொத்தம் நான்கு கேமராக்கள்

இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்கள் கொண்டு வருமா என்பது பற்றி எந்த உறுதிப்பாடும் இல்லை. எனினும், ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனின் முன்னோடியான ஜியோனி எஸ்10 மொத்தம் நான்கு கேமராக்கள் கொண்டிருந்ததால் இக்கருவியும் அதே கொண்டு வரலாமென எதிர்பார்க்க்கப்படுகிறது.

பேட்டரி அளவு

பேட்டரி அளவு

வெளியான பட்டியலில் சாதனத்தின் பேட்டரி அளவு மற்றும் அதன் இணைப்பு அம்சங்கள் போன்ற விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இனி வரும் நாட்களில் ஜியோனி எஸ்11 பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் இக்கருவி வெளியாகும் என்றும் எதிர்நோக்கலாம்.

Best Mobiles in India

English summary
Gionee S11 visits GFXBench with 6-inch FHD+ display, 16MP camera. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X