16எம்பி+8எம்பி; 20 எம்பி+8எம்பி என மொத்தம் 4 கேமராக்களுடன் மிரட்டும் எஸ்11.!

இக்கருவியுடன் சேர்த்து மொத்தம் 8 பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களை ஜியோனி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.-

|

சீன மொபைல் உற்பத்தி நிறுவனமான ஜியோனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்11 ஸ்மாட்போன் ஆனது டிஇஎன்என்ஏ சான்றிதழ் வலைத்தளம் மற்றும் ஜிஎப்எக்ஸ்பெஞ்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் காணப்பட்டதை தொடர்ந்து இப்போது ஜியோனி எஸ்11 கருவியின் சில தெளிவான புகைப்படங்களும் கசிந்துள்ளன.

சீனாவின் மைக்ரோபிளாக்கிங் வலைத்தளமான விபோவில் தோன்றியுள்ள இந்த லீக்ஸ் புகைப்படங்கள், கருவியின் பிரதான அம்சங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இக்கருவியுடன் சேர்த்து மொத்தம் 8 பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களை ஜியோனி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.x

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி.?

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி.?

வெளியீடு சார்ந்த அனைத்து பணிகளையும் ஜியோனி அமைத்துவிட்டதாகவும். ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற நவம்பர் 26-ஆம் தேதியன்று நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பக்கங்களிலும் பெஸல்லெஸ் வடிவமைப்பு.!

இரண்டு பக்கங்களிலும் பெஸல்லெஸ் வடிவமைப்பு.!

வெளியான லீக்ஸ் புகைப்படங்களில், இளஞ்சிவப்பு, தங்கம் மற்றும் நீல நிறம் என பல்வேறு வண்ண விருப்பங்கள் ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் காட்சியளிக்கிறது. உடன் ஜியோனி எஸ்11 கருவியின் பக்கங்களில் பெஸல்லெஸ் டிஸ்பிளே நீள்வதையும் காண முடிகிறது

மொத்தம் நான்கு கேமரா.!

மொத்தம் நான்கு கேமரா.!

மேலும் இக்கருவி முன் மற்றும் பின்பக்கங்களில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளதையும் வெளியான லீக்ஸ் புகைப்படங்களில் தெளிவாக காண முடிகிறது. ஆக ஜியோனி எஸ்11 ஆனது மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

6.01 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே.!

6.01 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே.!

சாதனத்தின் பின்புற இரட்டை கேமரா அமைப்பு கீழே ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. மேலும் ஜியோனி அதன் கீழே ஒரு 3.5 மிமீ ஜாக்தனை தக்க வைத்து கொண்டுள்ளது. முன்னர் வெளியான டிஇஎன்என்ஏ சான்றிதழ் வலைத்தள அறிக்கையின்படி, ஜியோனி எஸ் 11 ஆனது 2160 x 1080 என்ற பிக்சல்கள் தீர்மானம், 18: 9 என்ற திரை விகிதத்துடனான 6.01 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

ரேம் மற்றும் செயலி.?

ரேம் மற்றும் செயலி.?

மேலும் இது 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் பெயர் குறிப்பிடப்படாத சிப்செட் உடனான 6 ஜிபி ரேம்இ கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. ஜிஎப்எக்ஸ்பெஞ்ச்மார்க்கிங் வலைத்தளத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஏஆர்எம் மாலி- ஜி71 ஜிபியோ உடனான ஒரு மீடியா டெக் எம்டி6763 மூலம் இயக்கப்படும் என்று தெரியவந்தது.

16எம்பி, 8எம்பி; 20 எம்பி, 8எம்பி.!

16எம்பி, 8எம்பி; 20 எம்பி, 8எம்பி.!

64 ஜிபி அலசிலான உள் சேமிப்பு, 128 ஜிபி 5அரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, எல்இடி பிளாஷ் கொண்ட 16எம்பி + 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 20 எம்பி + 8 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது.

3600 எம்ஏஎச் பேட்டரி.!

3600 எம்ஏஎச் பேட்டரி.!

கலப்பின இரட்டை சிம் கரு யான ஜியோனி எஸ்11 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 (நௌவ்கட்) அடிப்படையிலான அமீகோ ஓஎஸ் 5.0 உடன் இயங்குகிறது மற்றும் 3600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை வழங்குகின்றது.

Best Mobiles in India

English summary
Gionee S11 leaked images suggest four cameras, 6-inch FullView display. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X