Home
Mobile

மொத்தம் நான்கு கேமரக்கள், 6ஜிபி ரேம் என மிரட்டும் எஸ்10 (விலை & அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளன -வழக்கமான எஸ்10, எஸ்10பி மற்றும் எஸ்10சி ஆகிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

By Muthuraj

சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு நிகழ்வில் ஜியோனி நிறுவனம் அதன் எஸ்10 ஸ்மார்ட்போன் ஒன்றைத் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக முன் மற்றும் பின்புறத்தில் உள்ள இரட்டை கேமரா அமைப்பு முறை திகழ்கிறது.

இந்த கேமரா அம்சம் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் முந்தைய வாரங்களில் கசிந்தன மற்றும் இப்போது அவ்வாறே ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான கேமரா அம்சம் கொண்டுள்ள இக்கருவி கொண்டுள்ள இதர அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

மூன்று வகை

மூன்று வகை

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளன -வழக்கமான எஸ்10, எஸ்10பி மற்றும் எஸ்10சி ஆகிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளில் ஜியோனி எஸ்10 மற்றும் எஸ்10சி ஆகியவை ஜூன் 9-ஆம் தேதி முதல் சீனாவில் கொள்முதல் செய்யப்படும். எஸ்10பி ஆனது வெள்ளிக்கிழமையிலிருந்து கிடைக்கும்.

விற்பனை புள்ளி

விற்பனை புள்ளி

முன்னதாக குறிப்பிட்டபடி, ஜியோனி எஸ்10 என்ற வழக்கமான மாறுபாட்டை பொறுத்தம்மட்டில் இதன் தனித்துவமான விற்பனை புள்ளியாக அதன் கேமரா துறை திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6பி லென்ஸ் மற்றும் எப் / 1.8 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ள ரியர் கேம் செல்பீக்களுக்கான ஒரு 8 மெகாபிக்சல் சென்சார் இணைந்த ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி கண்டா ஜியோனோ எஸ்9 கருவிக்கு அடுத்தபடியாக வெளியாகியுள்ள இந்த ஜியோனி எஸ்10 ஆனது அமிங்கோ 4.0 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) இன்-செல் டிஸ்ப்ளே மற்றும் 6ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு மீடியா டெக் ஹெலியோ பி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

64 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்புடன் வரும் இக்கருவி ஒரு 3450எம்ஏஎச் பேட்டரி திற னுடன் கிட்டத்தட்ட ரூ.24,400/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பதிப்பை ஜியோனி உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, தற்போது அதில் தெளிவு இல்லை.

ஜியோனி எஸ்10பி

ஜியோனி எஸ்10பி

ஜியோனி எஸ்10பி கருவியை பொறுத்தம்மட்டில் சுமார் ரூ.20,700/- விலை நிர்ணயம் கொண்டுள்ளது மற்றும் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன் பக்கம் ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

செயலி

செயலி

அமீகோ 4.0 கொண்டு இயங்கும் இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட இக்கருவி ஒரு பெரிய 3700எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குகிறது.

எஸ்10சி

எஸ்10சி

இறுதியாக, குறைந்த விலையில் வெளியாகும் ஜியோனோ எஸ்10சி சுமார் ரூ15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இக்கருவியும் ஒரு ஒற்றை 16 மெகாபிக்சல் ரியர் சென்சார் மற்றும் முன்பக்கம் ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டு வருகிறது.

பேட்டரி

பேட்டரி

மற்ற இரண்டு போன்களை போல இக்கருவியும் அமிக்கோ 4.0 ஓஎஸ் கொண்டு இயங்கும். மேலும் 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 32ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு மற்றும் 3100எம்ஏஎச் பேட்டரித்திறனும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee S10 With Four Cameras Launched: Price, Release Date, Specifications, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X