3450எம்ஏச் பேட்டரியுடன் வரும் புதிய ஜியோனி எஸ் 10 ஸ்மார்ட்போன்.!
ஜியோனி எஸ் 10 பின்புற ரியர் கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!
ஜியோனி நிறுவனம் பல்வேறு மொபைல்மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது அட்டகாசமான ஜியோனி எஸ் 10 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. சீன கைபேசி தயாரிப்பாளரான ஜியோனி தற்போது செல்பீ கேமராவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் ஜியோனி எஸ் 10-ஐ அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஜியோனி ஏ 1 மற்றும் ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து மாறுபட்டவை இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான (1080-1920) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

32ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி மெமரிக் பொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:
ஜியோனி எஸ் 10 பின்புற ரியர் கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:
ஜியோனி எஸ் 10 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.
மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது அமிங்கோ 4.0 ஒஎஸ் மூலம் இயங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஜியோனி எஸ் 10 பொருத்தவரை 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








