புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..

|

ஜியோனி அடுத்த மாதம் இந்தியாவில் பெரிய பேட்டரியுடன் புதிய ஜியோனி மேக்ஸ் புரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஜியோனி நிறுவனம் வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தியாவில் இந்த புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..

ஜியோனி மேக்ஸ் புரோ கடந்த ஆண்டு 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும். வரவிருக்கும் ஸ்மார்ட்போன் நாட்டில் பிளிப்கார்ட் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஈ-காமர்ஸ் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் ஒரு பிரத்தியேக தளத்தை உருவாக்கியுள்ளது.

வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..

ஜியோனி மேக்ஸ் புரோ இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று பிளிப்கார்ட் பக்கம் வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52' இன்ச் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ஜியோனி மேக்ஸ் புரோ 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று நிறுவனத்தின் விளம்பர பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியலின் படி, ஜியோனி மேக்ஸ் புரோ ஒரு பிளிப்கார்ட் தனித்துவமான தயாரிப்பாக இருக்கும். ஜியோனி மேக்ஸ் புரோ பற்றிய கூடுதல் விவரங்கள் பிளிப்கார்ட்டில் வெளியிடப்படவில்லை. ஆனால், முந்தைய ஜியோனி மேக்ஸ் ரூ .5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோனி மேக்ஸ் 6.1 இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வந்தது. இது ஸ்ப்ரெட்ரம் 9863 ஏ ஆக்டா கோர் சிப்செட் உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜை கொண்டிருந்தது.

ரூ. 7,499 விலை முதல் புதிய மோட்டோ E7 பவர் இன்று விற்பனை.. உடனே இதைச் செய்யுங்கள்..ரூ. 7,499 விலை முதல் புதிய மோட்டோ E7 பவர் இன்று விற்பனை.. உடனே இதைச் செய்யுங்கள்..

ஜியோனி மேக்ஸ் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 10W சார்ஜிங் ஆதவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.இது இரட்டை கேமரா அமைப்புடன் வெளிவந்தது, செல்ஃபிக்களுக்காக 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மேம்பட்ட அம்சத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Gionee Max Pro launching in India on March 1st : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X