ஜியோனி எம்7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
ஜியோனி எம்7 ஸ்மார்ட்போனை புதிய மாறுபாடுகளுடன் வரும் 26-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஜியோனி நிறுவனம்.மேலும் இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன்.

சிறப்பம்சங்கள்:
இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் வரும் 26-ம் தேதி புதிய வண்ண மாறுபாடுகளில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி மேப்பிள் ரெட் மற்றும் அம்பர் கோல்ட் வண்ண விருப்பங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு,நீலம், சாம்பெயின் தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்
(1080-2160)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக்:
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 3ஜி, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
ஜியோனி எம்7 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications