Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஜியோனி எம்7 பவர்; ஒப்போ எப்5 கொஞ்சம் ஓரம்போ.!

ஜியோனி எம்7 பவர் ஆனது ப்ளூ, பிளாக், மற்றும் கோல்ட் ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகலாம்.

By Muthuraj

சீன கைபேசி உற்பத்தியாளரான ஜியோனி, இந்தியாவில் அதன் எம்7 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான ஊடக அழைப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஜியோனி எம்7 பவர்; ஒப்போ எப்5 கொஞ்சம் ஓரம்போ.!

நவம்பர் 15-ஆம் தேதியன்று நடக்கும் நிகழ்வொன்றில் ஜியோனி எம்7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த வாரம் முதலே இக்கருவி சார்ந்த டீசர்கள் மற்றும் லீக்ஸ் செய்திகள் பெருமளவில் வெளியான வண்ணம் இருக்க, அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மிகப்பெரிய அம்சங்கள்.!

இரண்டு மிகப்பெரிய அம்சங்கள்.!

ஜியோனியின் எம்7 பவர் சீனாவில் பிரீமியம் ஜியோனி எம்7 உடன் தொடங்கப்பட்டது. வெளியாகும் ஜியோனி எம்7 பவர் ஸ்மார்ட்போன் இரண்டு மிகப்பெரிய அம்சங்கள் - அதன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18: 9 விகிதத்துடன் கூடிய டிஸ்பிளே தான்.!

வண்ண மாறுபாடு.!

வண்ண மாறுபாடு.!

ஜியோனி எம்7 பவர் ஆனது சுமார் ரூ.20,000/- என்ற விலை நிர்ணயப்புள்ளியை சீனாவில் பெற்றுள்ளதால், இந்திய சந்தையிலும் இதேபோன்ற விலையில் அறிமுகமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோனி எம்7 பவர் ஆனது ப்ளூ, பிளாக், மற்றும் கோல்ட் ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகலாம்.

ஓப்போ எப்5 மற்றும் விவோ வி7 ப்ளஸ்.!

ஓப்போ எப்5 மற்றும் விவோ வி7 ப்ளஸ்.!

தவிர எதிர்வரும் ஜியோனி எம்7 பவர் ஆனது ஓப்போ எப்5 மற்றும் விவோ வி7+ போன்ற சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை விளைவிக்கும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஸ்க்ரீன் டிஸ்பிளே.!

முழு ஸ்க்ரீன் டிஸ்பிளே.!

அம்சங்களை பொறுத்தமட்டில், ஜியோனி எம்7 பவர் ஆனது ஒரு 6 அங்குல (18: 9 விகிதம்) முழு ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 720x1440 பிக்சல்கள் என்ற திரை தீர்மானத்துடன் வருகிறது.

256 ஜிபி வரை விரிவாக்க ஆதரவு.!

256 ஜிபி வரை விரிவாக்க ஆதரவு.!

இது 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப் டிராகன் 435 எஸ்ஓசி உடன் இணைந்து 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

கலப்பு இரட்டை சிம் கார்டு.!

கலப்பு இரட்டை சிம் கார்டு.!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான அமீகோ ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது மற்றும் கலப்பு இரட்டை சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ், எஃப் / 2.0 துளை மற்றும் பிடிஏஎப் உடன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜ் + கைரேகை சென்சார்.!

பாஸ்ட் சார்ஜ் + கைரேகை சென்சார்.!

ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. எம்7 பவர் ஸ்மார்ட்போன் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் ஒரு கைரேகை சென்சாரும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee M7 Power India Launch Set for November 15, Sports 5000mAh Battery. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X