அட்டகாசமான ஜியோனி எம்7, எம்7 பவர் அறிமுகம்.!
ஜியோனி எம்7 பவர் 6-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலியைக் கொண்டுள்ளது.
ஜியோனி நிறுவனம் சீனாவில் ஜியோனி எம்7 மற்றும் ஜியோனி எம்7 பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை நேற்று அறிமுகப்படுத்தியது,மேலும் ஜியோனி எம்7 பவர் ஸ்மார்ட்போன் பொதுவாக 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவித்துள்ளது.

ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.27,500ஆக உள்ளது. ஜியோனி எம்7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000ஆக உள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி எம்7:
இக்கருவி 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தனிச் சிறப்பு பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு ஆகும். மீடியாடெக் ஹீலியோ பி30 செயலியைக் கொண்டுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது ஜியோனி எம்7.

ஜியோனி எம்7 கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி எம்7 பவர்:
ஜியோனி எம்7 பவர் 6-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது ஜியோனி எம்7 பவர்.

ஜியோனி எம்7 பவர் பேட்டரி:
5000எம்ஏச் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications