செப்டம்பர் 25 : மிரட்டலான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஜியோனி எம்7 பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
ஜியோனி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஜியோனி எம்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்கிறது, மேலும் இதன் முன்புற பேனல் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது, இந்த பேனலின் புகைப்படம் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1:
ஜியோனி எம்7 பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications