செப்டம்பர் 25 : அட்டகாசமான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

ஜியோனி எம்7 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6758 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

By Prakash
|

ஜியோனி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நான்கு கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புகைபடங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் இரட்டை சிம் ஆதரவு மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

ஜியோனி எம்7 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6758 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஜியோனி எம்7 டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 8மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Gionee M7 images released Stunning design with four cameras ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X