48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை!

|

பல்வேறு சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனில் 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு, 5100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இருக்கிறது.

ஜியோனி எம்12 அறிமுகம்

ஜியோனி எம்12 அறிமுகம்

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் நிறுவனமான ஜியோனி இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஜியோனி எம்12 ப்ரோவை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் அதே தொடரில் ஜியோனி மற்றொரு ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஜியோனி எம்12 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிப்செட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது மீடியாடெக் ஹீலியோ ஏ25 மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி ஆகும்.

ஜியோனி எம் 12 ஸ்மார்ட்போன் விலை

ஜியோனி எம் 12 ஸ்மார்ட்போன் விலை

ஜியோனி எம் 12 ஸ்மார்ட்போன் நைஜீரியாவின் விலை குறித்து பார்க்கையில், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட் விலை என்ஜிஎன் 78,900 (சுமார் ரூ.15,400) இதில் ஹீலியோ ஏ25 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஹீலியோ பி22 எஸ்ஓசி சிப்செட்டோடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட் விலை என்ஜிஎன் 85,000 (சுமார் ரூ.16,600) ஆகும். அதேபோல் ஹீலியோ பி22 எஸ்ஓசி 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை என்ஜிஎன் 75,000 (சுமார் ரூ.14,600) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் டாஜ்லிங் பிளாக் மற்றும் மேஜிக் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஜியோனி எம்12: அம்சங்கள்

ஜியோனி எம்12: அம்சங்கள்

ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷன், 91% ஸ்கிரீன்-டு-பாடி விகித அளவுடன் வருகிறது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இதற்கு டிஸ்ப்ளே இடதுபுறத்தில் பஞ்ச் ஹோல் கட் அவுட் இருக்கிறது.

அது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்!அது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்!

பின்புறத்தில் நான்கு கேமரா

பின்புறத்தில் நான்கு கேமரா

ஜியோனி எம்12 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் செங்குத்து வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிப்செட் வேரியண்ட்டில் கிடைக்கிறது. அதோடு 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டு ரேம் வசதிகளில் கிடைக்கிறது.

பின்புறத்தில் கைரேகை சென்சார்

பின்புறத்தில் கைரேகை சென்சார்

இந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இரட்டை 4ஜி வோல்ட் இணைப்பு, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
Gionee M12 Smartphone Launched With 48Mp Camera, 5100 mAh Battery: Price, Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X