ஜியோனி: ரூ.13,700 தொடங்கி ரூ.43,000/- வரை மொத்தம் 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

|

இதை ஒரு வகையான சாதனை என்றே கூறலாம். சீன மொபைல் தயாரிப்பாளரான ஜியோனி நிறுவனம், ஒரே நேரத்தில் மொத்தம் எட்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமாக அனைத்து எட்டு ஸ்மார்ட்போன்களுமே, 2017-ஆம் ஆண்டு தொடங்கிய கவர்ச்சிகரமான பாணியான எட்ஜ் டூ எட்ஜ் ஸ்க்ரீன் வடிவமைப்பை பெற்றுள்ளது. இருப்பினும் ஒன்றுக்கொன்று வெவ்வேறு விலைபிரிவுகளை கொண்டுள்ளது.

கேட்கவே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா.? சரி - ஜியோனி எஸ்11, ஜியோனி எஸ்11எஸ், ஜியோனி எம்7 ப்ளஸ், ஜியோனி எம்7, ஜியோனி எப்6, ஜியோனி எப்205, ஜியனி ஸ்டீல் எம்7 பவர் மற்றும் ஜியோனி எம்7 மினி என்ற பெயர்களில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் என்ன.? விலை நிர்ண்யம் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ஜியோனி எஸ்11எஸ்

ஜியோனி எஸ்11எஸ்

ஜியோனி எஸ்11எஸ் தான் நிறுவனத்தின் புதிய முதன்மை தயாரிப்பாகும். கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி துருப்பிடிக்காத ஸ்டீலை விட சுமார் 27 சதவீதம் கடினமானதென்று நிறுவனம் கூறியுள்ளது. இக்கருவியில் எஃகு கொண்டு செய்யப்பட்ட ஒரு சட்டம் உள்ளது மற்றும் உயரமான 18: 9 விகிதம் கொண்ட 6.1 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது.

மொத்தம் நான்கு கேமரா

மொத்தம் நான்கு கேமரா

இமேஜிங்கை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கம் ஒரு 16 + 8எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் பின்பக்கம் ஒரு 20 + 8எம்பி கலவையிலான இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஒரு 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி 6 ஜிபி ரேம் உடனான மீடியா டெக் ஹீலியோ பி30 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது.

ஜியோனி எஸ்11

ஜியோனி எஸ்11

மற்றொரு மாறுபாடான ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனும் எஸ்11எஸ் போன்றே கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு கொண்டுள்ளது. இக்கருவியும் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கம் ஒரு 16 + 8எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் பின்பக்கம் ஒரு 20 + 8எம்பி கலவையிலான இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

64ஜிபி உள் சேமிப்பு

64ஜிபி உள் சேமிப்பு

ஒரு 3210எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி 4 ஜிபி ரேம் உடனான மீடியா டெக் ஹீலியோ பி23 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இக்கருவியும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது.

ஜியோனி எம்7 ப்ளஸ்

ஜியோனி எம்7 ப்ளஸ்

எம்7 ப்ளஸ் என்பது ஜியோனியின் மராத்தான் வரிசையின் முதன்மை மாதிரியாகும். மேலும் ஒரு லேசான ஃபிரேம்களை கொண்ட ஒரு மெல்லிய உலோக வடிவமைப்பை கொண்டு வருகிறது. எம்7 ப்ளஸ் ஒரு இரட்டை பாதுகாப்பு குறியாக்க சிப் உடன் வருகிறது, இது மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்கள் என்கிரிப்ட் செய்யவும், வன்பொருள் வழியாக நேரடியாக பணம் செலுத்துவும் கூட உதவும்.

ஜியோனி எம்7

ஜியோனி எம்7

ஜியோனி எம்7 ஆனது ஸ்னாப்ட்ராகன் 660 செயலி உடனான 6 ஜிபி ரேம் மமூலம் இயக்கப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடனான 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. எம்7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 6.43 அங்குல எல்எல்டி + எம்எல்இடி டிஸ்ப்ளே திகழ்கிறது. இக்கருவி 128ஜிபி அளவிலான உள் சேமிப்பு கொண்டுள்ளது.

ஜியோனி எப்6

ஜியோனி எப்6

எப் தொடரின்கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களையும் ஜியோனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோனி எப்6 ஆனது 5.7 அங்குல முழு காட்சி காட்சி, 3 ஜிபி ரேம், 2970 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஜியோனி எப்205

ஜியோனி எப்205

எப்205 என்றழைக்கப்படும் இன்னொரு தொலைபேசியானது உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் 2ஜிபி ரேம், 16ஜிபி உள் சேமிப்பு, ஒரு 2670 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு 5.45-அங்குல புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 5எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குறிப்பிடப்படாத குவால்காம் சிப்செட்டுகள் மூலம் இயக்கப்படுகின்றன.

எம்7 பவர்

எம்7 பவர்

நிறுவனத்தின் பவர் தொடரின்கீழ் வெளியாகியுள்ள இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான எம்7 பவர் மற்றும் எம்7 மினி ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில், எம்7 பவர் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வாங்க கிடைக்கிறது. ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி மூலம்ரு சக்தியூட்டப்படுகின்றது.

எம்7 பவர் மினி

எம்7 பவர் மினி

எம்7 பவர் மினி கருவியை பொறுத்தமட்டில் 5.5 அங்குல முழு டிஸ்பிளே, 4,000எம்ஏஎச் பேட்டரி, 3 ஜிபி ரேம், ஒரு 8எம்பி செல்பீ கேமரா, 8எம்பி பின்புற கேமரா மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு கருவிகளுமே குறிப்பிடப்படாத க்வால்காம் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஜியனி எம்7 பிளஸ் - சுமார் ரூ.43,000/-
ஜியோனி எஸ்11எஸ் - சுமார் ரூ .32,300/-
ஜியோனி எஸ்11 - கிட்டத்தட்ட ரூ.17,600/-
ஜியோனி எப்6 - சுமார் ரூ.12,700/-
ஜியோனி எப்205 - சுமார் ரூ.9,700/-
ஜியோனி எம்7 மினி சுமார் ரூ.13,700/-

கிடைக்கும் தன்மை

கிடைக்கும் தன்மை

இந்த நிகழ்வில் காட்டப்பட்டுள்ள எட்டு ஸ்மார்ட்போன்களில், எம்7 பவர் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, எஸ்11 ஆனது அடுத்த சில வாரங்களில் நாட்டில் அறிமுகமாகலாம். அதன்பின்னர், இந்தியாவிற்கு எஸ்11எஸ் வெளியாகலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Gionee launches S11s, M7 Plus and six other bezel-less phones in China. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X