பட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.?

வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி, புல் வியூ டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த, பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி திட்டமிட்டுள்ளது.

|

வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி, புல் வியூ டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த, பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே; வெளியிடுவது யார் தெரியுமா.?

இந்த அறிமுக விழா சார்ந்த ஊடக அழைப்பிதழ்களை ஏற்கனவே நிறுவனம் அனுப்பியுள்ளது என்பதும், அதில் "இள மனதினை தூண்டுவதற்கான இந்த முயற்சியின் மூலம், ஜியோனி ஸ்மார்ட்போன்களின் முழு புதிய உலகத்தை - இன்னும் பெரிதாக, பரந்த அளவில் மற்றும் சிறப்பான முறையில் - ஆராய்ந்து அனுபவிக்க எங்களுக்கு உதவுமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்" என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நம்பமுடியாத பட்ஜெட் விலை.!

நம்பமுடியாத பட்ஜெட் விலை.!

இந்த வெளியீட்டின் மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விலை நிர்ணயம் தான். ஒரு நம்பமுடியாத பட்ஜெட் விலைக்கு ஜியோனி புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் வெளியாகும். இன்னும் குறிப்பிட்டு கூற வேண்டுமெனில், அறிமுகமாகும் புதிய ஜியோனி ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.9,000 முதல் ரூ.15,000/- வரை என்கிற விலைக்குள் நிர்ணயிக்கப்படும்.

பேஸ் அன்லாக் அம்சத்துடன் இணைக்கப்படும்.!

பேஸ் அன்லாக் அம்சத்துடன் இணைக்கப்படும்.!

மேலும் இந்த வெளியீட்டில், இரண்டுக்கும் மேற்பட்ட ஜியோனி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். உடன் இந்த ஜியோனி ஸ்மார்ட்போன்கள் பேஸ் அன்லாக் அம்சத்துடன் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியிடும் முனைப்பின் கீழ்.!

போட்டியிடும் முனைப்பின் கீழ்.!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி மற்றும் லெனோவா மற்றும் தென் கொரிய நிறுவனமான சாம்சங் உடன் போட்டியிடும் முனைப்பின் கீழ், ஜியோனி நிறுவனம் 2017-18 ஆண்டுகளில் அதன் மார்க்கெட்டிங் பட்ஜெட்டை 750 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதும், தனது தயாரிப்புப் பிரிவுகளை விரிவுபடுத்துவதன் மூலமும் நாட்டின் சில்லறை வர்த்தகத்தை அதிகரிக்கவும் கவனம் செலுத்துகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்6, எப்205 மற்றும் ஸ்டீல் 3.!

எப்6, எப்205 மற்றும் ஸ்டீல் 3.!

கடந்த ஆண்டு நவம்பரில், சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் புல் வியூ டிஸ்பிளே கொண்ட எப்6, எப்205 மற்றும் ஸ்டீல் 3 ஆகியவற்றை ஜியோனி வெளியிட்டது. இந்த சாதனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஏப்ரல் 26 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கலாம். ஜியோனி எஸ்11, எஸ்11எஸ் மற்றும் எம்7 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் அறிவிக்கப்பட்டன, ஆனால் அவைகளின் விலை சற்று கூடுதலாக இருந்தன.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு.!

இரட்டை பின்புற கேமரா அமைப்பு.!

அம்சங்களை பொறுத்தவரை ஜியோனி எப்205 ஆனது 18: 9 டிஸ்ப்ளே, உலோக வடிவமைப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆகிய பிரதான அம்சங்களையும் மற்றும் இதர நுழைவு நிலைஅம்சங்களையும் கொண்டுள்ளது. எப்6 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, ஒரு 3டி வளைந்த கண்ணாடி பின்புற வடிவமைப்பு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 4000mAh பேட்டரி உடன் இதர மிட்-ரேன்ஜ் அம்சங்களை கொண்டுள்ளது. இறுதியாக, ஜியோனி ஸ்டீல் 3 ஆனது 5.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 ப்ராஸசர், 8எம்பி முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமரா, 4000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee to launch new budget smartphones with Full View display in India on April 26. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X