நீண்டநாட்களுக்கு பிறகு ஜியோனி அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!

|

ஜியோனி நிறுவனம் நீண்டநாட்களுக்கு பிறகு புதிய ஜியோனி கே3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

 அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

ஜியோனி கே3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு1520x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த சிப்செட் வசதி

எதிர்பார்த சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 6763 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கீழடி ஆய்வில் தமிழனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய தொழில்நுட்பங்கள்.!கீழடி ஆய்வில் தமிழனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய தொழில்நுட்பங்கள்.!

கேமரா வசதி

கேமரா வசதி

ஜியோனி கே3 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஜியோனி கே3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை,ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஏர்டெல் ரூ.599 திட்டம்: ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசி-2ஜிபி டேட்டா-84நாட்கள் வேலிடிட்டி.!ஏர்டெல் ரூ.599 திட்டம்: ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசி-2ஜிபி டேட்டா-84நாட்கள் வேலிடிட்டி.!

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.7,956-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,983-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee K3 with dual rear camera setup, 5000mAh battery launched and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X