4000எம்ஏஎச்; ஆண்ட்ராய்டு நௌவ்கட்; பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் சிக்கிய ஜியோனி.!

இதன் வழியாக, ஜிஎன்5006 சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவலை பெறமுடிகிறது.

|

ஸ்மார்ட்போன் உலகின் நடப்பு போக்குடன் இணையும் வகையில், நவம்பர் 26 அன்று ஜியோனி நிறுவனம், அதன் 8 பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. பல்வேறு தரநிலை மற்றும் சான்றிதழ் தளங்களுக்கு முதலில் நன்றி கூறிவிடுவோம், அவைகளால் தான் நாம் குறிப்பட்ட ஸ்மார்ட்போன் சார்ந்த சில பிரதான அம்சங்களை மற்றும் ஸ்மார்ட்போன் பற்றிய அடித்தளமான யோசனைகளை பெற முடிகிறது.

உதாரணமாக, இந்த மாத தொடக்கத்தில் டிஇஎன்என்ஏ (TENAA) வலைத்தளத்தில் ஜியோனி எப்6 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. அது தவிர, மேலும் இரண்டு பிற ஜியோனி ஸ்மார்ட்போன்களான எஸ்11 மற்றும் எம்7 ப்ளஸ் ஆகியவைகள் சார்ந்த போஸ்டர் மற்றும் டீசர்கள் வெளியாகின.

ஜிஎன்5006 என்ற பெயரில் மேலுமொரு ஜியோனி.!

ஜிஎன்5006 என்ற பெயரில் மேலுமொரு ஜியோனி.!

அதனை தொடர்ந்து தற்போது, மாடல் எண்ணை ஜிஎன்5006 என்ற பெயரில் மேலுமொரு ஜியோனி ஸ்மார்ட்போன் சீன சான்றிதழ் தளமான டிஇஎன்என்ஏ-வில் (TENAA) காணப்பட்டுள்ளது. இதன் வழியாக சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவலை பெறமுடிகிறது.

எச்டி+ ரெரெசல்யூன் .!

எச்டி+ ரெரெசல்யூன் .!

டிஇஎன்என்ஏ-வில் பட்டியலிடப்பட்ட ஜியோனி ஜிஎன்5006 ஆனது 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதாவது 1,440 × 720 பிக்ஸல் அளவிலான எச்டி+ ரெரெசல்யூஷனை இந்த டிஸ்பிளே வழங்கும். செயலியை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் பயன்படுத்தலாம்.

நுழைவு நிலை ஸ்மார்ட்போன்.!

நுழைவு நிலை ஸ்மார்ட்போன்.!

செயலியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இக்கருவி ஒரு குறைந்த அதிர்வெண் கொண்டிருக்கும் என்பது உறுதி, ஏனெனில், ஜியோனி ஜிஎன்5006 என்பது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆகும், ஹை-எண்ட் சாதனம் அல்ல. மேலும் பட்டியலின்படி சென்றால், இக்கருவி இரண்டு வெவ்வேறு நினைவக வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.

4000எம்ஏஎச் பேட்டரி.!

4000எம்ஏஎச் பேட்டரி.!

அதாவது, அடிப்படை மாறுபாடானது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பும், அதிகபட்சம் 2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டிருக்கும். தவிர, மிகவும் வியக்கத்தக்க வகையில், ஜியோனி ஜிஎன்5006 ஆனது ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது. கூறப்படும் பேட்டரித்திறன் உண்மையானால், நிச்சயமாக இதுவொரு பிரதான அம்சமாக பேசப்படும்.

8எம்பி செல்பீ கேமரா.!

8எம்பி செல்பீ கேமரா.!

மென்பொருள் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான, நிறுவனத்தின் (முன் நிறுவப்பட்ட) தனிப்பயன் அமிகோ யூஐ கொண்டு இயங்கலாம். ஒளியியல் அடிப்படையில், பின்னால் 8எம்பி முதன்மை கேமரா மற்றும் முன் ஒரு 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

அழகிய மெல்லிய பெஸல்.!

அழகிய மெல்லிய பெஸல்.!

அளவீட்டில் (பரிமாணங்கள்) 144.7 × 69.8 × 8.5 மிமீ மற்றும் 170கிராம் எடையைக் கொண்டுள்ள ஜியோனி ஜிஎன்5006 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை பொறுத்தமட்டில், அதன் டிஸ்பிளேவிற்கு கீழ் அழகிய மெல்லிய பெஸல்களை தோற்றுவிக்கிறது. எனினும், இதுவொரு பெஸல் ஸ்மார்ட்போன் என குறிப்பிட முடியாது.

கடினமான பின்புற குழு, கைரேகை ஸ்கேனர்.!

கடினமான பின்புற குழு, கைரேகை ஸ்கேனர்.!

டிஇஎன்என்ஏ-வில் பட்டியலிடப்பட்டுள்ள படங்களின் படி, இந்த கைபேசியானது ஒரு ஒற்றை கேமரா கொண்ட கடினமான பின்புற குழு கொண்டுள்ளது. ஜியோனி நிறுவனத்தின் கடந்த கால ஸ்மார்ட்போன்களை போலில்லாது இது ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டு வருகிறது. மேலும் சில வதந்திகள், ஜிஎன்5006 ஆனது ஜியோனீ ஸ்டீல் வரிசையில் ஒரு உறுப்பினராகவும் இருக்கும் என்றும் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Gionee GN5006 visits TENAA with Android Nougat, 4,000mAh battery. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X