Home
Mobile

ரூ.5,499-விலையில் அட்டகாசமான ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஜியோனி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு என்கிற மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது.

 உறுதிபூண்டுள்ளது

ஜியோனி தயாரிப்புகள் இந்தியாவை தளமாகக் கொண்ட குழுவால் உருவாக்கம் பெற போகின்றன. குறிப்பாக இதன் அனைத்து தயாரிப்புகளையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

ஜியோனி எஃப் 8 நியோ

புதிய ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 5.45 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மெமரி கார்டை பயன்படுத்த

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ரோம் என்கிற ஸ்டோரேஜ் விருப்பத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது. மேலும் ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை பொறுத்தவரை, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் வருகிறது. அதாவது கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

நியோ ஸ்மார்ட்போனில்

ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஜியோனி ஸ்மார்ட்போன் ஆனது ஃபேஸ்

கேமரத்துறையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 8MP அளவிலான சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 5MP அளவிலான செல்பீ ஷூட்டர் உடன் வருகிறது. மேலும் புதிய ஜியோனி ஸ்மார்ட்போன் ஆனது ஃபேஸ் அன்லாக், ஸ்லோ மோஷன், பனோரமா, நைட் மோட், டைம் லேப்ஸ், பர்ஸ்ட் மோட், கியூஆர் குறியீடு, ஃபேஸ் பியூட்டி மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.

ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி

ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த ஜியோனி எஃப் 8 நியோ சாதனத்தில் உள்ளது.

 32ஜிபி மெமரி கொண்ட ஜியோனி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,499-ஆக உள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Gionee F8 Neo Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X