நீங்களும் அப்படித்தானே நினைச்சீங்க.. இது iPhone-னு.. அதுதான் இல்ல.. ஆப்பிளுக்கு விபூதி அடித்த சீன கம்பெனி!
இந்த ஸ்மார்ட்போனை தயாரித்து, அறிமுகம் செய்துள்ள சீன நிறுவனத்தை பார்த்து.. "எனக்கே விபூதி அடிக்க பார்க்குறல" என்று ஆப்பிள் (Apple) நிறுவனம் கேட்டால் அதில் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால், கீழ்வரும் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் போனிற்கும், ஐபோன் 13 ப்ரோவிற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? இது ஜியோனி எஃப் 3 ப்ரோ (Gionee F3 Pro) ஸ்மார்ட்போனாகும். ஜியோனியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஐபோன் 13 ப்ரோவை (iPhone 13 Pro) போலவே உள்ளது; கூடவே இது சியோமி எம்ஐ 11 அல்ட்ராவின் (Xiaomi Mi 11 Ultra) வடிவமைப்பையும் "காப்பி" அடித்துள்ளது.

அதாவது ஜியோனி எஃப்3 ப்ரோவின் பிளாட் ஃப்ரேம் பாடி (Flat Frame Body) மற்றும் கேமரா மாட்யூல் (Camera Module) ஆனது ஐபோனை போலவே உள்ளது. மேலும் இதன் ரியர் கேமராவின் வலது பக்கத்தில் உள்ள இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவானது (Secondary Display) சியோமி எம்ஐ 11 அல்ட்ராவில் இருப்பது போன்றே உள்ளது.
ஜியோனி எஃப்3 ப்ரோ அம்சங்கள்: கோல்டன் (Golden), மார்னிங் ப்ளூ (Morning Blue) மற்றும் இங்க் பிளாக் (Ink Black) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள ஜியோனி எஃப்3 ப்ரோ ஒரு டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போனாகும். இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி610 (Unisoc T610) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 21 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் டூயல் அல்ட்ரா-வைட் கேமராக்கள் உள்ளன.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பின் அருகே டைம் (Time), நோட்டிஃபிக்கேஷன்ஸ் (Notifications) மற்றும் கால் அலெர்ட்களை (Call Alert) காண்பிக்கும் ஒரு இரண்டாம் நிலை டிஸ்பிளேவும் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஜியோனி எஃப்3 ப்ரோவின் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, ஜியோனி எஃப்3 ப்ரோவில் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங்கை (Standard charging) ஆதரிக்கும் 3,900mAh பேட்டரி உள்ளது. கடைசியாக 76 மிமீ அகலம், 166 மிமீ நீளம், 8.8மிமீ தடிமனுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 205 கிராமாகும்.
ஜியோனி எஃப் 3 ப்ரோ விலை: இது 8ஜிபி + 128ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் (தற்போது வரை) சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,790 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் எப்போது நடக்கும்? என்ன விலைக்கு வரும்? போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








