5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் புதிய ஜியோனி எப்205எல் ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஜியோனி நிறுவனம் கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி ஜியோனி நிறுவனம் விரைவில் கொண்டுவரும் ஸ்மார்ட்போனின் மாடல் எண் எப்205எல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜியோனி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.அதன்பின்பு ஜியோனி எப்205எல் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஜியோனி எப்205எல் :
ஜியோனி எப்205எல் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720 × 1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
ஜியோனி எப்205எல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஜியோனி ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2670எம்ஏஎச்:
ஜியோனி எப்205எல் ஸ்மார்ட்போனில் 2670எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. கிராவிட்டி சென்சார், தொலைவு சென்சார், லைட் சென்சார் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications