ரூ.8,999/-க்கு ஒன்னு; ரூ.13999/-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா.!

இன்று (வியாழக்கிழமை) புது தில்லியில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் ஆகின.

|

சீன மொபைல் உற்பத்தியாளரான ஜியோனி நிறுவனத்தின், ஜியோனி எப்205 மற்றும் ஜியோனி எஸ்11 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இன்று (வியாழக்கிழமை) புது தில்லியில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் ஆகின.

ரூ.8999-க்கு ஒன்னு; ரூ.13999-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா!

கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் இந்திய விற்பனையை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் பிரதான சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், புல் வியூ டிஸ்பிளே (18: 9 விகித விகிதத்துடன்), பேஸ் அன்லாக், பொக்கே விளைவு, ப்ரைவேட் பேஸ் 2.0, ஆப் லாக் மற்றும் ஆப் க்ளோன் அம்சங்கள் ஆகியவைகளை கூறலாம்.

ஜியோனி எப்205 மற்றும் ஜியோனி எஸ்11 லைட் விலை நிர்ணயம்.!

ஜியோனி எப்205 மற்றும் ஜியோனி எஸ்11 லைட் விலை நிர்ணயம்.!

ஜியோனி எப்205 ஆனது இந்தியாவில் ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கிறது. இது ரோஸ், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய வண்ண மாறுபாடுகளில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்களின் வழியாக வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல் கிடைக்கும். மறுகையில் உள்ள, ஜியோனி எஸ்11 லைட் ஆனது ரூ.13,999/-க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இது பிளாக், கோல்ட் மற்றும் டார்க் ப்ளூ போன்ற வண்ண மாறுபாடுகளில் வாங்க கிடைக்கிறது, இது அடுத்த மாத இறுதியில் ஷிப்பிங்கை துவங்குகிறது.

ஜியோனி எப்205 அம்சங்கள்.!

ஜியோனி எப்205 அம்சங்கள்.!

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஜியோனி எப்205 ஆனது, ஆண்ட்ராய்டு 7.1.1 அடிப்படையிலான, அமிகோ 5.0.11 எப், மீடியா டெக் MT6739 SoC மற்றும் 2ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. ஒரு 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம்) டிஸ்பிளே கொண்டுள்ளது.

8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல்.!

8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல்.!

ஒளியியல் (கேமரா) துறையை பொறுத்தவரை, ஜியோனி எப்205 ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் திறனும் கொண்டுள்ளது.

2670mAh பேட்டரி.!

2670mAh பேட்டரி.!

ஜியோனி எப்205-ல் உள்ள இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4G VoLTE, ப்ளூடூத் 4.2, Wi-Fi, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, அக்செலரோமீட்டர், டிஜிட்டல் காம்பஸ், கிராவிட்டி மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இல்லை. ஒரு 2670mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீட்டில் 148.40x70.7x7.95 மிமீ மற்றும் 135.6 கிராம் எடையும் கொண்டுள்ளது.

ஜியோனி எஸ்11 லைட் அம்சங்கள்.!

ஜியோனி எஸ்11 லைட் அம்சங்கள்.!

மறுகையில் இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஜியோனி எஸ்11 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 7.1.1 அடிப்படையிலான, அமிகோ ஓஎஸ் 5.0.13 எஸ், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி மற்றும் 4 ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்குகிறது. ஒரு 5.7 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம்) டிஸ்பிளே கொண்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா.!

இரட்டை பின்புற கேமரா.!

கேமராவுக்கு வரும் போது, ஜியோனி எஸ்11 லைட் ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. முன் பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இது பொக்கே விளைவை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் திறனும் கொண்டுள்ளது.

3030mAh பேட்டரி.!

3030mAh பேட்டரி.!

ஜியோனி எஸ்11 லைட்-ல் உள்ள இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4G VoLTE, ப்ளூடூத் 4.2, Wi-Fi, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, ஜியோனி எப்205 போன்றே, அக்செலரோமீட்டர், டிஜிட்டல் காம்பஸ், கிராவிட்டி மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது. ஒரே மாற்றமாக இது கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ளது. ஒரு 3030mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீட்டில், 153.75x 72.6x7.85mm அளவைக் கொண்டது மற்றும் 141 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee F205, Gionee S11 Lite With FullView Displays Launched in India: Price, Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X