ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.!

இரண்டு போன்களின் முன்பகுதியில் எந்த பட்டன்களும் இல்லை. ஸ்கீரினில் மட்டுமே ஹோம், பேக் மற்றும் நேவிகேசன் பட்டன்கள் உள்ளன.

|

ஜியோனி நிறுவனம் இந்த வாரம் ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட் என்னும் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி, சாம்சங், லெனோவா/மோட்டரோலா மற்றும் ஹெச்.எம்.டி குளோபல் போன்ற போட்டியாளர்களுடன் மல்லுகட்டும் விலையில் விதமாக முறையே ரூ9,000 மற்றும் ரூ15,000 என்ற விலையில் வெளிவருகிறது. ஏப்ரல்26 முதல் ஜியோனிF205 வெளியான நிலையில், மே மாத இறுதியில் ஜியோனிS11 லைட் வெளியாகிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் 18:9 திரை, பேஸ் ரெக்கனேசன், ப்ரைவேட் ஸ்பேஸ்2.0(லாக் செய்யும் போது கிடைக்கும் தனி சேமிப்பு பகுதி) போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. ஜியோனி S11 லைட்டில் இரண்டு பின்புற கேமராக்களும் உள்ளன.

ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.!


இவ்விரண்டு போன்களும், சியோமி ரெட்மீ நோட்5, நோக்கியா6 மற்றும் மோட்டோ ஜி5 எஸ் போன்றே மென் மற்றும் வன்பொருட்களை கொண்டுள்ளன. ஜியோனி F205 மற்றும் S11 லைட் ன் வெளியீட்டுவிழாவில் குறிப்பிட்ட சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.!


வடிவமைப்பு

இந்த இரு ஸ்மார்டபோன் மாடல்களுக்கும் பெரிய அளவு வேறுபாடு இல்லை. இரண்டின் பின்புறமும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தாலும், S11 லைட்டை விட F205 கெத்தாக தெரிகிறது. 18:9 அளவிலான வடிவமைப்பில் எச்.டி மற்றும் 720×1440 பிக்சல் வசதியும் உள்ளது.

S11 லைட்டின் திரை 5.7 இன்ச்-ம், F205 சற்று சிறிதாக 5.45 இன்ச் அளவுடையது.

இரண்டு போன்களின் முன்பகுதியில் எந்த பட்டன்களும் இல்லை. ஸ்கீரினில் மட்டுமே ஹோம், பேக் மற்றும் நேவிகேசன் பட்டன்கள் உள்ளன.F 205 ல் செல்பி மற்றும் வீடியோ கால் செய்ய வசதியாக 5MBகேமரா உள்ளது. S11 ல் மேம்படுத்தப்பட்ட 16MB முன்புற கேமரா உள்ளது. F205 ன் பின்புறம் 8MBகேமரா உள்ளது. S11 லைட்டில் 13MB மற்றும் 2MBசென்சார் கேமராவும் உள்ளது.

F205ல் பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லாத நிலையில், S11 லைட்டின் பின்பகுதியில் உள்ளது.

ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.!


மென்பொருள் மற்றும் இதர அம்சங்கள்
ஜியோனி F205 ல் மீடியாடெக் எம்.டி6739 Soc மற்றும் 2GB ரேம் உள்ளது. ஜியோனி S11 லைட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 Soc உடன் 4GBரேம் உள்ளது. இதனால் அனைத்து செயலிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. S11 லைட்டின் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் மிகத்துல்லியமாக செயல்படுகிறது.

F205 ல் 16GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும், 2670mAh பேட்டரியும் உள்ளது. அதே நேரம் S11 லைட்டில் 32GBஉள்ளார்ந்த சேமிப்பு திறனும், 3030mAh பேட்டரியும் உள்ளது.

இந்த இரண்டு போன்களும் ஆண்ராய்டு 7.1.1 நவ்கட் ன் மேல் அமிகோ ஓ.எஸ் 5.0 ல் செயல்படுகின்றன. எப்போது ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்பதை ஜியோனி தெளிவுபடுத்தவில்லை.

Best Mobiles in India

English summary
Gionee F205 and Gionee S11 Lite First Impressions ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X