ஜியோனி ஈ லைப் ஈ7 மினி இந்தியாவில் வெளியானது

By Meganathan
|

சீன தயாரிப்பாளர்களின் இரண்டாம் புகலிடமாக இந்திய சந்தைகள் மாறிவிட்டதென்று சொல்லும் அளவு இந்திய சந்தைகளை ஆக்கிரமித்துள்ளனர் சீனர்கள். அத்தகைய சீன நிறுவனங்களில் ஒன்று தான் ஜியோனி. அந்நிறுவனத்தின் புதிய வரவான ஜியோனி ஈ லைப் ஈ7 மினி போனின் சிறப்பம்சங்களை பார்ப்போமா

டிசம்பர் 2103 ஆம் ஆண்டு வெளியான ஈ லைப் ஈ7 மாடலின் அடுத்த மாடல் தான் இந்த ஜியோனி ஈ லைப் ஈ7 மினி. புதிய ஜியோனி ஈ7 மினி ஒவ்வொரு போட்டோவையும் அழகாக காட்டுமளவு வடிடமைக்கப்பட்டுள்ளது.

ஜியோனி ஈ லைப் ஈ7 மினி வெளியானது

ஈ லைப்7 மினி புகைப்பட பிரியர்களுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. இதில் பானரோமா ஷாட், ஜெஸ்டர் மோட் மற்றும் துள்ளியமான போட்டோக்களை கொடுக்கும் எஹ்டிஆர் மோடும் உள்ளது.

ஜியோனியின் இந்திய பிரிவு தலைவர் கூறும் போது புதிய ஜியோனி ஈ7 மினி வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, இது அனைவரும் விரும்பும் போனாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜியோனி ஈ லைப் ஈ7 மினி - முக்கிய சிறப்பம்சங்கள்
4.7 இன்ச் 720*1280 பிக்சல் ஐபிஎஸ் இக்ஸோ டிஸ்ப்ளேவுடன் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஓக்டாகோர் மீடியாடெக் பிராசஸருடன் 1 ஜிபி ராமும் இதில் உள்ளது. ஆன்டிராய்டு 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ், டூயல் சிம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதோடு புதிய ஜியோனியில் ப்ளிப் ஆப்ஷனுடன் 13 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.

படங்களை தெளிவாக கொடுக்க ப்ளூ கிளாஸ் பில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதோடு 16 ஜி.பி இன்பில்ட் மெமரியும் 3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் வசதியுடன் 142.9 கிராம் எடையில் கிடைக்கின்றது. நீண்ட நேரம் சார்ஜ் வசதிக்காக 2200 எம்ஏஎஹ் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Xx39toexEig?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Read more about:
English summary
Gionee Officially Released Elife E7 Mini Smartphone With 13-MP Rotating Flip Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X