டூயல் கேம்; 4ஜிபி ரேம்; 4550எம்ஏஎச் பேட்டரி உடன் ஜியோனியோ ஏ1 பிளஸ்.!

|

ஜியோனி நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ஜியோனி ஏ 1 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.26,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி நாளை முதல் அதாவது ஜூலை 26-ஆம் முதல் இந்தியாவின் சில்லறை விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும்.

ஜியோனி ஏ1 பிளஸ் - சாம்பல், மோச்சா கோல்ட் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலில் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் ஜியோனி ஏ1 உடன் இணைந்து அறிவிக்கப்பட்டது. ஜியோனி ஏ1 பிளஸ் ஆனது ஒரு 6 அங்குல முழு எச்டி (1920x1080 பிக்சல்கள்) கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 2.5டி டிஸ்பிளே மற்றும் மீடியா டெக் ஹீலியோ பி25 செயலி மற்றும் 4ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தில் அமிகோ 4.0 உடன் இயங்குகிறது. மேலும் 2 மணிநேரத்தில் சாதனம் முழு சார்ஜ் வசூலிக்க உதவும் 18வாட் அல்ட்ராஃபாஸ்ட் சார்ஜ் 4550 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

64 ஜிபி உள் சேமிப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது. ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனில் வேகமான கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, இது போனை 0.2 விநாடிகளில் திறக்கிறது.

மெகாபிக்சல்

மெகாபிக்சல்

கேமரா துறையை பொறுத்தமட்டில், ஆட்டோஃபோகஸ், எப்2.0, 5பி லென்ஸ், ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. முன்பக்கம் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் வோல்ட், வைஃபை, மைக்ரோ- யூஏசுபி போர்ட், ப்ளூடூத் 4.0, மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மூலம் கலப்பு இரட்டை சிம், 4ஜி ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 166.4 x 83.3 x 9.1 மிமீ மற்றும் 226 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee A1 Plus with dual rear camera, 4550 mAh battery launched in India for Rs 26,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X