20எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தும் ஏ1 லைட் (விலை, அம்சங்கள்).!

By Prakash
|

நேபாளத்தில் ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் சிவப்பு, கருப்பு மற்றும் தங்க வண்ணங்களில் கிடைக்கிறது, தற்போது இந்த ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யமுடியும்.

ஜியோனி நிறுவனம் கேமராவில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை ஜியோனி ஏ 1 லைட்டில் பயன்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் சேமிப்புதிறன்கள் ஜியோனி ஏ 1 லைட்க்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.3அங்குல அளவு டிஸ்பிளே, மற்றும் (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இவை இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

ஜியோனி ஏ 1 லைட் பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 20 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது .

 ஜியோனி ஏ 1 லைட் சாப்ட்வேர்:

ஜியோனி ஏ 1 லைட் சாப்ட்வேர்:

ஜியோனி ஏ 1 லைட் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.3ஜிகாஹெர்ட்ஸ், ஆக்டோகோர் மீடியாடெக் 6773 இவற்றுள் அமைந்துள்ளது. அண்ட்ராய்டு 7.0 மூலம் இவை இயக்கப்படுகிறது. மேலும் 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது.

 பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் ஜியோனி ஏ 1 லைட்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, வோல்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

 விலை:

விலை:

ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போன் இயக்கத்தில் தனித்தன்மை பெற்றுள்ளது, மேலும் இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.26,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Gionee A1 Lite launched with 20 megapixel Selfie camera and Android Nougat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X