2017 ஆகஸ்ட் 10 : அட்டகாசமான ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.
ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
ஜியோனி நிறுவனம் நாளை ஜியோனி ஏ 1 லைட் என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விலைப்பொறுத்தவரை ரூ.14,999ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.
ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதன் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் இவற்றின் செயலி தனிச்சிறப்பு கொண்டவையாக உள்ளது, எனக் கூறப்படுகிறது.

5.3-இன்ச் டிஸ்பிளே:
ஜியோனி ஏ 1 லைட் பொறுத்தவரை 5.3-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டி வளைந்த கண்ணாடி மற்றும் கொரில்லா கண்ணாடி 3 சிறந்த பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:
ஜியோனி ஏ1 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications