Home
Mobile

ரூ.1000 விலையில் டச் ஸ்கிரீன் மொபைல் : ஜி'ஃபைவ் திட்டம்

By Super

ரூ.1000 விலையில் டச் ஸ்கிரீன் மொபைல் : ஜி'ஃபைவ் திட்டம்
2011ல் ஆண்டில் நிறைய மொபைல் நிறுவனங்கள் தனது வெற்றி கொடியை நாட்டிவிட்டன. அதோடு கடந்த ஆண்டை ஸ்மார்ட்போனுக்கான வருடம் என்று கூட சொல்லலாம். இந்த ஆண்டு வெற்றிகொடி நாட்ட ஜி'ஃபைவ் நிறுவனமும் விரும்புகிறது. இந்நிறுவனம் சீனாவில் பெரிய அளவில் பெயர்பெற்ற நிறுவனம்.

இந்தியாவிலும் இந்த ஜி'ஃபைவ் மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.ஜி'ஃபைவ் நிறுவனம் தனது விலை உயர்ந்த மொபைல்களை குறைந்த விலைக்கு கொடுக்க இருக்கிறது. இதனால்

குறைந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைலை வழங்குவதாக அர்த்தம் அல்ல. ஜி'ஃபைவ் நிறுவனம் சீன நாட்டில் வாடிக்கையாளர்களின் செல்வாக்கை அதிகம் பெற்றுள்ளது.

ஏனெனில் இந்நிறுவனத்தின் மொபைல்கள் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அந்த மொபைல்களின் விலையை சற்று குறைத்து இந்தியாவில் வெளியிட்டால் சிறப்பான விற்பனையை எட்டும் என்று ஜி'ஃபைவ் கருதுகிறது. இதனால் 10%-30% சதவிகிதம் வரை குறைக்க இருக்கிறது.

இப்படி விலை குறைத்து கொடுக்கப்படும் இந்த மொபைல்கள் அனைத்தும் 1.8 இஞ்ச் தொடுதிரை, மியூசிக் பிளேயர், கேமரா என்று சகல வசதிகளையும் வழங்கும்.

இத்தனை வசதிகளும் இருந்தும் இந்த மொபைலை வெறும் ரூ.1,000 விலையிலும், ரூ.6,000 விலை கொண்ட மொபைலை ரூ.4,500 விலையிலும் பெறலாம். இந்த வாய்ப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வேட்டையாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X