Home
Mobile

புது லுக்கில் வந்த OnePlus போன்.. ரூ.5499 இயர்பட்ஸ் இலவசம்.. கூடவே ரூ.3000 டிஸ்கவுண்ட்.. ஆர்டர் அள்ளுமே!

2024 ஜூலை 16 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் நிகழ்வின் போது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பல புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) 5ஜி ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) டேப்லெட், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) இயர்பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) ஸ்மார்ட் வாட்ச் ஆகியவைகள் அடக்கம்.

எல்லாருடைய கவனமும் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டின் (OnePlus Summer Launch Event) புதிய தயாரிப்புகள் மீதிருக்கும் நேரத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிற்கான புதிய சன்செட் டூன் கலர் ஆப்ஷனை (OnePlus 12R Sunset Dune Colour Option) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே வாங்க கிடைக்கும் கூல் ப்ளூ மற்றும் அயர்ன் கிரே ஷேட்களுடன் இணைகிறது.

புது லுக்கில் வந்த OnePlus போன்.. ரூ.5499 இயர்பட்ஸ் இலவசம்!

புதிய கலர்வே-ஐ தவிர ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஒன்பிளஸ் 12ஆர்-ன் சன்செட் டூன் கலர் ஆப்ஷன் மீது 1 இலவச சலுகை மற்றும் 3 அட்டகாசமான விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன சலுகைகள்? புதிய சன்செட் டூன் கலர் ஆப்ஷனின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

என்ன விலை? எப்போது முதல் விற்பனை? 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் 12ஆர்-ன் சன்செட் டூன் கலர் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இணையதளம் வழியாக ஜூலை 20 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

என்னென்ன சலுகைகள்? ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நல்ல நிலையில் உள்ள பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும் போது ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் புதிய சன்செட் டூன் கலர் ஆப்ஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 9 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும். எல்லாவற்றை விட முக்கியமான ஒன்பிளஸ் 12ஆர்-ன் சன்செட் டூன் கலர் ஆப்ஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5499 மதிப்புள்ள ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இயர்பட்ஸ் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

என்னென்ன அம்சங்கள்? முன்னரே குறிப்பிட்டபடி, அயர்ன் கிரே மற்றும் கூல் ப்ளூ கலர்களில் கிடைக்கும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிற்கும் இதற்கும் அம்சங்கள் மற்றும் டிசைன் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. இது 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கிறது, எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Get Free OnePlus Buds 3 with OnePlus 12R New Sunset Dune Colour First Sale on July 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X