1 மில்லியன் Poco C3 யூனிட்டுகள் விற்று தீர்ந்தது.. குறுகிய கால சலுகை விலை ரூ. 6,999 மட்டுமே..உடனே முந்துங்கள்.

|

இந்தியாவில் போகோ சி 3 (Poco C3) ஸ்மார்ட்போனின் விற்பனை ஒரு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் தாண்டி சென்றுவிட்டதாக போகோ இந்தியா நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக நிறுவனம் இப்போது Poco C3 மீது அதிரடி சலுகையைக் குறுகிய காலத்திற்கு அறிவித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Poco C3 இந்தியாவில் புதிய மைல்கல்

Poco C3 இந்தியாவில் புதிய மைல்கல்

கடந்த ஜூன் மாதத்தில் மலேசியாவில் அறிமுகமான ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பாக இந்த Poco C3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபரில் இந்தியாவிலும் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி சி 11, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 01 போன்றவற்றுக்கு எதிராக Poco C3 ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறக்கப்பட்டது.

ஒரு மில்லியன் யூனிட்கள் விற்பனை

ஒரு மில்லியன் யூனிட்கள் விற்பனை

Poco C3 ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே மற்றும் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் வருகிறது. Poco C3 ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பமும் உள்ளது. போகோ சி 3 இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் ஒரு மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

ஜனவரி 24ம் தேதி வரை மட்டும் சலுகை

ஜனவரி 24ம் தேதி வரை மட்டும் சலுகை

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் Poco நிறுவனம் Poco C3 ஸ்மார்ட்போன் மீது ஜனவரி 24ம் தேதி வரை செல்லுபடியாகும் புதிய தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. Poco C3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 6,999 என்ற புதிய தள்ளுபடி விலையும் , இதன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 7,999 என்ற விலையும் இப்பொது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

ரூ. 500 விலை குறைப்பு

ரூ. 500 விலை குறைப்பு

இது ஒரு வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி என்பதனால், விலை குறைவாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தள்ளுபடியை மிஸ் பண்ணிட வேண்டாம். Poco C3 ஸ்மார்ட்போனின் வழக்கமான விலையிலிருந்து ரூ. 500 விலை குறைப்பு பெற்றுள்ளது. இத்துடன் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகள் வழியாக வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Get a Limited-Period Discount On Poco C3 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X