Nothing-ஐ நக்கல் அடிச்சவங்களாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க.. Nothing Phone 2-வின் அம்சங்கள் அப்படி!
நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமான வேகத்திலேயே பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது. டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட், பேக் பேனலில் தூசி, மோசமான ஆடியோ குவாலிட்டி, நம்பகமற்ற ஃபேஸ் அன்லாக் என எக்கச்சக்கமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இருப்பினும் அது தனக்கென்ன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்க தவறவில்லை. நத்திங் போன் 1 மட்டுமின்றி, நத்திங் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளும் அதற்கு உறுதுணையாக இருந்தன. இப்படியாகத்தான், 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) உருமாறியுள்ளது!

இதற்கிடையில் நத்திங் போன் 2 மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும்படியாக சில விவரங்கள் வெளியாகியுள்ளன. நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன், 2023 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் (2023 Summer) அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நத்திங் போன் 2-வின் சில அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
கீக்பென்ச் பட்டியலில் (Geekbench Listing) காணப்பட்ட விவரங்களின்படி, நத்திங் போன் 2 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் (Snapdragon 8 Gen 1 SoC) மூலம் இயக்கப்படலாம். இது நத்திங் போன் 1-ல் உள்ள ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் ப்ராசஸர் (Snapdragon 778G+ SoC) உடன் ஒப்பிடும்போது இது மிகவும் சக்தி வாய்ந்த ப்ராசஸர் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும் வெளியான அறிக்கையின்படி, நத்திங் போன் 2 ஆனது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் உடன் அறிமுகமாகும். அவைகள் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம். நத்திங் போன் 2 ஆனது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 1.5 லேயர் உடன் வரலாம்.
மேலும் நத்திங் போன் 2 ஆனது மேம்படுத்தப்பட்ட க்ளைஃப் இன்டர்பேஸ் (Improved Glyph Interface) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி மதிப்பீட்டையும் (IP Rating) பெறலாம். கடைசியாக இது 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம்.
நத்திங் போன் 2 ஆனது பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலை பணியகத்தின் (Bureau of Indian Standard) சான்றிதழை பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆக இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
போதாக்குறைக்கு நத்திங் போன் 2 அறிமுகமான பின்னர், அது பிரபல இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இந்தியாவில் வாங்க கிடைக்குமென்றும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 ஆனது, பிளிப்கார்ட் வழியாக ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், ட்ரூ-டு-லைஃப் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.55 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
Source: My Smart Price


Click it and Unblock the Notifications








