Home
Mobile

Galaxy Unpacked 2026: 200MP கேமராவுடன் மிரளவிட ரெடியான Samsung கேலக்ஸி எஸ்26 சீரிஸ்.. என்னென்ன வருது?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கேலக்ஸி அன்பேக்டு 2026 (Galaxy Unpacked 2026) இவென்ட் இன்று நடக்க இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் (Samsung Galaxy S26 Series) மட்டுமல்லாமல், கேலக்ஸி பட்ஸ்4 (Galaxy Buds4), கேலக்ஸி பட்ஸ்4 ப்ரோ (Galaxy Buds4 Pro) மாடல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் நடக்க இருக்கிறது. சாம்சங் இந்தியா தளம் மற்றும் அதிகார்ப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக இந்த லைவ் இவென்ட்டை பார்த்து கொள்ளலாம். ரூ.999 செலுத்தி ப்ரீ-ரிசர்வ் செய்து கொள்ளலாம். ரூ.2699 மதிப்பிலான வவுச்சர்களை பெற்று கொள்ளலாம். ரிஜிஸ்டர் செய்தால், ரூ.5,000 மதிப்பிலான வவுச்சர்கள் கிடைக்கும்.

Galaxy Unpacked 2026: மிரளவிட ரெடியான Samsung கேலக்ஸி எஸ்26 சீரிஸ்!

இந்த ரிசர்வ் மற்றும் ரிஜிஸ்டரை சாம்சங் இந்தியா தளம் வழியாக செய்து கொள்ளலாம். கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட்டில் முக்கியமாக மூன்று மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதுபோக கேலக்ஸி பட்ஸ் 4 சீரிஸ் (Galaxy Buds 4 Series) வெளியாக இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இதை பார்த்தால் அல்ட்ரா பிரீமியம் மாடல்களாக இருப்பது தெரிகிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra Specifications): 6.9 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே உள்ளது. குவாட்எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) உள்ளது.

5000mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் கிடைக்க இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்க உள்ளது. இந்திய மார்கெட்டில் ரூ.1.4 லட்சம் பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26, எஸ்26 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S26, S26 Plus Specifications): சீனா மற்றும் யுஎஸ் மார்கெட்டில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை எதிர்பார்க்கலாம். மற்ற மார்கெட்களில் சாம்சங் எக்ஸினோஸ் 2600 (Samsung Exynos 2600) சிப்செட் கிடைக்க வாய்ப்புள்ளது. கேலக்ஸி எஸ்26 போனில் 6.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

50 எம்பி மெயின் + 12 எம்பி அல்ட்ரா வைடு + 12 எம்பி டெலிபோட்டோ உள்ளது. 4300mAh பேட்டரி உள்ளது. எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4900mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் உள்ளது. ரூ.85,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ரூ.1,10,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடலை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Galaxy Unpacked 2026 Samsung Galaxy S26 Series Launching in India Today What To Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X