Home
Mobile

தேதி குறிச்ச Samsung.. பிப்.25 க்கு அப்புறம் இதுதான்.. 4300mAh பேட்டரி.. 50MP OIS கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2026 (Galaxy Unpacked 2026) இவென்ட் நடக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் (Samsung Galaxy S26+) ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் நடக்க இருப்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. சாம்சங் இந்தியா ஸ்டோர் வழியாக ரூ.999 செலுத்தி ப்ரீ-ரிசர்வேஷன்களை செய்து கொள்ளலாம். இந்த ப்ரீ-ரிசர்வேஷன் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. எந்தெந்த மாடல்கள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

தேதி குறிச்ச Samsung.. பிப்.25க்கு அப்புறம் இதுதான்.. 4300mAh பேட்டரி!

இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கு ஏற்ப சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதேபோல விலையும் கசிந்துள்ளது. இதனால் சாம்சங் பிரியர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S26, Galaxy S26+ Specifications): 6.3 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) புரொடெக்சனை சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளேவை கேலக்ஸி எஸ்26பிளஸ் கொண்டுள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆர்மர் 2 புரொடக்சன் கிடைக்கிறது. டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2600 (Deca Core Samsung Exynos 2600) சிப்செட் மற்றும் எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4300mAh பேட்டரியை சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 7.2 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரியை சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 7.3 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது. இப்போது விலையை பார்க்கலாம்.

ரூ.1,07,735 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனும், ரூ.1,36,852 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது யூரோ அடிப்படையில் கசிந்த விலைகளாக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் மாறுபாடுகள் இருக்கும். பிப்ரவரி 25ஆம் தேதியில் விலை மற்றும் பீச்சர்கள் தெரியவந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Galaxy Unpacked 2026 Samsung Galaxy S26 Galaxy S26 Plus Specifications Price Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X