Home
Mobile

பிச்சிக்க போகுது.. வெயிட்டிங் விரதம் இன்னைக்கு முடியுது.. 50MP கேமரா.. 12GB ரேம்.. Galaxy ஏஐ.. எந்த மாடல்?

கேலக்ஸி அன்பேக்ட் 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் சாம்சங் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) வெளியாக இருக்கிறது. இருந்தாலும், பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இது மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த பிரீமியம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் போனின் பீச்சர்கள், விலை எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Plus Specifications): இப்போது, பார்க்கப்போகும் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்வில்லை. இருப்பினும், நம்பத் தகுந்த வட்டாரங்களில் கசிந்துள்ளதால், இவற்றை எதிர்பார்க்கலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் போனில் 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது.

பிச்சிக்க போகுது.. வெயிட்டிங் விரதம் இன்னைக்கு முடியுது.. 50MP கேமரா!

கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வர இருக்கிறது. மெயின் & டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் ஒன் யுஐ 7 (One UI 7) வருகிறது. 7 வருட சப்போர்ட் கொடுக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரி வருகிறது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. பாடி மற்றும் புரொடெக்சனை பார்க்கையில், டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா ஆர்மோர் (Corning Gorilla Armor) மற்றும் பாடிக்கு IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அலுமினியம் ஃபிரேம் மற்றும் எஸ் பென் சப்போர்ட் உள்ளது.

மேலும், வழக்கமான இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.3 (Bluetooth: 5.3), வை-பை 6ஈ (Wi-Fi 6E), ஈசிம் (eSIM) மற்றும் 5ஜி ஆகியவை கிடைக்கின்றன. இப்போது, விலை, விற்பனை மற்றும் கலர் வேரியண்ட்கள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் விலை (Samsung Galaxy S25 Plus Price): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1.04,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,14,999 ஆகவும் இருக்கப் போகிறது. ப்ளூ பிளாக் (Blue Black), சில்வர் ஷேடோ (Silver Shadow), பிங்க் கோல்டு (Pink Gold) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

மேலும், கோரல் ரெட் (Coral Red), மின்ட் (Mint) மற்றும் நேவி ப்ளூ (Navy Blue) கலர்களும் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.

Image Credits: GSMArena

More from GizBot

Best Mobiles in India

English summary
Galaxy Unpacked 2025 Samsung Galaxy S25 Plus Launching Today Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X