கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?

S9 ல் பிக்சல் சற்று குறைவாக இருந்தாலும், எக்ஸ்பீரியா XZ2ன் 12MP கேமரா இதை சமப்படுத்துகிறது.

|

மிகப்பெரிதாக இருப்பதாலேயே XZ2 தான் S9+ க்கு சரியான போட்டியாக இருக்கப்போகிறது என பலர் வாதிடுவார்கள். ஆனால் எக்ஸ்பீரியாவை பொறுத்தமட்டில் இந்த யுத்தமே தேவையற்ற ஒன்று. ஏனெனில் கேலக்ஸியில் இரு கேமராக்கள் உள்ள நிலையில் XZ2ல் ஒன்று மட்டுமே உள்ளது. XZ2ஐ கச்சிதமான போன் எனக் கூறும் போது கேலக்ஸி S9 மட்டும் ஏன் இல்லை? போனை தேர்வு செய்யும் போது திரையின் அளவு தான் முக்கியமான அம்சம். இங்கே பார்த்தால் S9 5.8 இன்ச் மற்றும் XZ2 5.7 இன்ச் திரை அளவும் உடையது.

கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?


கேமராக்களை பொறுத்தவரையில் சோனி , மல்டி ஏஸ்பெக்ட் சென்சாரை எக்ஸ்பீரியா XZல் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் 19MP4:3 மற்றும் 17MP 16:9 புகைப்படங்களை எடுக்தமுடியும். இந்த ஆண்டு உருவாக்கத்தில் சப்தம் குறைத்தல் மற்றும் இமேஜ் ப்ராசஸ்ஸிங் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 960fps ஸ்லோ-மோ வீடியோக்களை தற்போது 1080p ல் எடுக்கலாம்.

சாம்சாங் நிறுவனமும் சூப்பர் ஸ்லோ-மோ பட்டியலில் இந்தாண்டு இணைந்துள்ளது. இது 720p/960fps உள்ள எக்ஸ்பீரியாவிற்கு போட்டியாக இருக்கும். ஆனாலும் 1080p/960fps வசதி கிடைக்காது. ஆனால் சோனியை விட கேலக்ஸியில் சிறப்பம்சம் என்னவென்றால், 4K பதிவுகளை எக்ஸ்பீரியா 30fpsயிலும் கேலக்ஸி 60fpsயிலும் எடுக்கும்.

S9 ல் பிக்சல் சற்று குறைவாக இருந்தாலும், எக்ஸ்பீரியா XZ2ன் 12MP கேமரா இதை சமப்படுத்துகிறது. ஆனால் கேலக்ஸியில் இதை விட சிறந்த அம்சமாக செல்பிக்காக, உயர்தர சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் வசதியுள்ள லென்ஸ் உள்ளது.

கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?


சிறப்பம்சங்கள் : ஓர் ஒப்பீடு
முக்கிய கேமராவை பொறுத்தவரை சாம்சாங் கேலக்ஸி S9ல்12MP, 4032 x 3024pxம், சோனி எக்ஸ்பீரியா XZ2 ல்19MP 4032 x 3024px ம் உள்ளது. S9 ல் 4:3 aspect, 1/2.55" sensor size, 1.4µm pixel சென்சாரும், XZ2ல் sizemulti-aspect, 1/2.3" sensor size,1.22µm pixel சென்சாரும் உள்ளது.

கேமரா லென்ஸை பொறுத்தவரை, S9ல் f/1.5-2.4, 26mm, OIS ம் , XZ2ல் f/2.0, 25mm அம்சங்களும், S9ல் டூயல் பிக்சல் PDAF போகஸ் மற்றும் XZ2ல் லேசர்+PDAF போகஸ் உள்ளது. இரண்டு மொபைலிலும் ஒரு எல்.ஈ.டி வசதி உள்ளது.

வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தில், சாம்சாங் கேலக்ஸி S9ல் 2160p@60/30fps, 1440p@30fps, 1080p@60/30fps வசதிகளும், சோனி எக்ஸ்பீரியா XZ2ல் 2160p@30fps, 1080p@60/30fpsம் உள்ளது.

ஸ்லோ-மோ அம்சத்தை பொறுத்தவரை, S9ல் 1080p@240fps, 720p@960fps திறனும், XZ2ல் 1080p@120fps, 1080p@960fp திறனும் உள்ளது. மேலும் இரண்டு மொபைலிலும் வீடியோ அம்சத்தில் ஸ்டீரியோ ஆடியோ வசதி உள்ளது.

முன்புற கேமராவை பொறுத்தவரை, S9ல் o8 MP, 1/3.6", 1.22µm, f/1.7, 25mm, 1440p@30fps கேமராவும், XZ2 ல் 5MP, 1/5", f/2.2, 23mm, 1080p@30fps கேமராவும் உள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?


கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2
கேமராவை தவிர்த்து, மற்ற அனைத்து அம்சங்களிலும் இரண்டும் சரிக்குசரியாக போட்டி போடுகின்றன. ஒரு பிரிவில் சாம்சாங் முந்துவது போலத்தெரிந்தாலும், உடனே மற்றொன்றில் எக்ஸ்பீரியா முந்திவிடுகிறது. எது எப்படியோ, இந்தாண்டு சிறந்த கேமராபோனை தேர்வு செய்வது கடினமான ஒன்றே!

Best Mobiles in India

English summary
Galaxy S9 vs Xperia XZ2 shootout; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X