2013ல் புதிய ப்ராசஸரில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் சாம்சங்

Posted By: Karthikeyan
2013ல் புதிய ப்ராசஸரில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் சாம்சங்

2012ல் தனது கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போனை களமிறக்கியது மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் அரசனாக சாம்சங் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது தனது புதிய போனைத் தயாரிப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்4 என்று ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது.

வரும் பிப்ரவரி 2013ல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போனில் 5 இன்ச் அளவில் ஒரு முழுமையான எச்டி அமோலெட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த எஸ்4 போன்தான் 5 இன்ச் முழு எச்டி அமோலெட் டிஸ்ப்ளையத் தாங்கி வரும் உலகின் முதல் போனாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த போனில் முதன் முதலாக சிஸ்டம் - ஆன் - எ - சிப் வருகிறது. அதோடு இந்த போனில் குவாட் கோர் ப்ராசஸர் மற்றும் கோர்டெக்ஸ் எ15 சிப் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய ப்ராசஸருக்கு அடோனிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த போன் எல்டிஇ நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும். அதோடு க்ளர்ஒஎல்இடி என்ற புதிய டிஸ்ப்ளேயையும் இந்த போனில் சாம்சங் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது.

2013ல் நடைபெறும் சிஎஸ் நிகழ்வில் இந்த போனை சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த போன் 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய மாடல்களில் வருகிறது. மேலும் ஸ்கைப் வசதியுடன் கூடிய 1.9எம்பி முகப்புக் கேமராவுடன் இந்த போன் களமிறங்க இருக்கிறது. இந்த போனை எதிர்பார்த்து இப்போதே சாம்சங் ரசிகர்கள் காத்திருக்கத் தயாராகிவிட்டார்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்