கேலக்ஸி எஸ்3 மற்றும் அட்டிவ் எஸ் - ஒரு ஒப்பீடு

By Karthikeyan
|
 கேலக்ஸி எஸ்3 மற்றும் அட்டிவ் எஸ் - ஒரு ஒப்பீடு

மொபைல் சந்தையில் முன்னனியில் இருக்கும் சாம்சங் சீரான இடைவெளியன் தனது புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கிக் கொண்டு வருகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மட்டும் தயாரிக்காமல் தற்போது விண்டோஸ் 8 போனையும் தயாரித்து வருகிறது. சாம்சங் தயாரித்து வரும் விண்டோஸ் போனுக்கு அட்டிவ் எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் விரைவில் களமிறங்க இருக்கிறது.

இந்த நேரத்தில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்3 போன் இந்த ஆண்டின் காலாண்டில் 61.5 மில்லியன் அளவிற்கு விற்பனையாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆன்ட்ராய்டு போன்களிலேயே கேலக்ஸி எஸ்3 போன்தான் தற்போது அதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த போனில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தையும் தற்போது சாம்சங் அப்டேட் செய்திருக்கிறது.

16ஜிபி கேலக்ஸி எஸ்3 போன் இந்தியாவில் ரூ.34,900க்கும், 32ஜிபி போன் ரூ.43,180க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பரில் சாம்சங்கின் விண்டோஸ் போனான அட்டிவ் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. எனவே இந்த இரண்டு போன்களின் சிறப்பு அம்சங்களை இந்த பகுதியில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

எஸ்3 போன் 133 கிராம் எடையிலும் அட்டிவ் எஸ் போன் 135 கிராம் எடையிலும் வருகின்றன. இரண்டு போன்களும் 4.8 இன்ச் அளவில் சூப்பர் அமோலெட் கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு டிஸ்ப்ளேகளும் மிகத் துல்லியமாக இருக்கும்.

ப்ராசஸரைப் பொருத்தவரை எஸ்3 போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் மற்றும் உயர்தர 3டி வசதியைக் கொண்டிருக்கிறது. ஆனால் அட்டிவ் எஸ் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ளஸ் ப்ராசஸர் மற்றும் உயர்தர மல்டிமீடிய வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வந்த எஸ்3 தற்போது ஜெல்லி பீன் அப்டேட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால் அட்டிவ் எஸ் விண்டோஸ் போன் 8 இயங்கு தளத்தில் வருகிறது.

கேமராக்களைப் பொருத்தவரை இந்த இரண்டு போன்களும் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்பக்க கேமராவையும் மற்றும் 1.9எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கின்றன.

சேமிப்பு வசதியைப் பொருத்தவரை எஸ்3 போன் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய மாடல்களில் வருகின்றது. ஆனால் அட்டிவ் எஸ் போன் 16ஜிபி மற்றும் 32ஜிபி ஆகிய அளவுகளில் வருகிறது. மேலும் இதில் 1ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற வசதிகளும் உண்டு.

இணைப்பு வசதிகளுக்காக இரண்டு போன்களுமே வைபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன. மொத்தத்தில் இந்த இரண்டு போன்களும் உயர்தர தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன.

எஸ் வாய்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட், டைரக்ட் கால் போன்ற தொழில் நுட்ப வசதிகளில் கேலக்ஸி எஸ் போன் சற்று முன்னிலையில் இருக்கிறது. அதே நேரத்தில் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அப்ளிகேசன்கள் மற்றும் பேட்டரி போன்றவற்றில் அட்டிவ் எஸ் போன் முன்னிலையில் இருக்கிறது. அதோடு இந்த அட்டிவ் போன் ரூ.30,000 வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X