லிக்விபெல் வாட்டர்புரூப் தொழில்நுட்பத்துடன் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
லிக்விபெல் வாட்டர்புரூப் தொழில்நுட்பத்துடன் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்!
மின்னணு சாதனங்களை வழங்கும் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் நவீன தொழில் நுட்ப முறையினை கொடுத்து வருகிறது. இது அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய ஒரு உண்மை தான். கேலக்ஸி எஸ் II ஸ்மார்ட்போன் போல, சாம்சங் கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போனும் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று தாராளமாக கூறலாம்.

நடந்து முடிந்த 2012 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் லிக்விபெல் என்ற வாட்டர்புரூஃப் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதே லிக்விபெல் வாட்டர்புரூஃப் தொழில்

நுட்பம் சாம்சங் எஸ்-III ஸ்மார்ட்போனிலும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்குவது பெரிதல்ல. ஆனால் எதேட்சையாக தண்ணீரிலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ அதற்கு தகுந்த பாதுகாப்பும் இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பு இந்த ஐபோன்-5 மற்றும் சாம்சங் எஸ்-III ஸ்மார்ட்போன்களில் இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய லிக்விப்பெல் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot