Home
Mobile

செம்ம டிமாண்ட் ஆகுது.. புதிய Galaxy S25 சீரீஸ் அறிமுகமானதும் Galaxy S24 சீரிஸ் மீது மெகா விலை குறைப்பு!

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்25 (Galaxy S25) சீரீஸின் கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல்கள் ஆகும்.

இம்மூன்று புதிய எஸ்25 சீரீஸ் மாடல்களும் அறிமுகமானதும் சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் (Samsung India Website), பழைய சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) மாடல்களின் அசல் வெளியீட்டு விலைகள் (Launch Prices) குறைக்கப்பட்டுள்ளன. என்னென்ன மாடல்கள் தற்போது என்ன விலைக்கு வாங்க கிடைகின்றன என்கிற விவரங்கள் இதோ:

Galaxy S25 சீரீஸ் அறிமுகமானதும் Galaxy S24 சீரிஸ் மீது  விலை குறைப்பு!

கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகமானது. தற்போது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.70,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.82,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது எந்த விலை குறைப்பும் இல்லை. இவைகள் முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1.09,999 என்கிற அதே அசல் அறிமுக விலையின் கீழ் தான், சாம்சங் இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,29,999 க்கு அறிமுகமானது. தற்போது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.1,21,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.1,31,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸின் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் +1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,59,999 க்கு அறிமுகமானது. தற்போது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் இது ரூ.1,51,999 க்கு வாங்க கிடைக்கிறது. நேற்று இரவு நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய கேலக்ஸி எஸ்25 சீரிஸ் அறிமுகமான பின்னரே இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது போல் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.80,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ்-ன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ. 1,41,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ. 1,65,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஆனது ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களிலும், சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.

இதேபோல கேலக்ஸி எஸ்25 மற்றும் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஐசி ப்ளூ, மின்ட், நேவி மற்றும் சில்வர் என்கிற 4 கலர்களிலும், சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான ப்ளூ பிளாக், கோரல் ரெட் மற்றும் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Galaxy S24 Galaxy S24 Ultra Launch Prices Reduced in Samsung India Website After Galaxy S25 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X