ஃபோல்டபிள் டைப் சாம்சங் கேலக்ஸ் எஸ்10 அறிமுகமாவது எப்போது?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் 2019ஆம் ஆண்டு நடைபெறும் சி.இ.எஸ் மாநாட்டில் வெளியாகும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்பதும் இந்த மாடல் போன் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் சி.இ.எஸ் மாநாட்டின் போது இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதுமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு எம்.டபிள்யூச் மாநாடு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றபோது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரீஸ் வெளியானது போலவே அடுத்த ஆண்டு எஸ்10 சீரீஸ் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த மாடல் குறித்த தகவல்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் வெளிவரும் என்றும், சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஃபோல்டபிள் டைப் போன் வரும் நவம்பர் முதல் அசெம்பிள் செய்ய தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்த ஃபோல்டபிள் மாடல் ஸ்மார்ட்போனுக்கான சப்ளையரை மாற்றிவிட்டதாக தென்கொரிய ஊடகமான தி பெல் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் இந்த மாடல் வெளியாகும் என்றும் அந்த ஊடகம் அறிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதலே இந்த மாடலுக்கு திட்டமிட்டு வரும் சாம்சங் நிறுவனம், இதற்காகவே பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த மாடலின் டிஸ்ப்ளே பேனல் ஃபோல்டபிளாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு நவம்பர் முதல் இதனை கொள்முதல் செய்ய சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 300,00 முதல் 500,000 வரை டிஸ்ப்ளே பேனலை கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு லாஸ்வேகஸ் நகரில் நடைபெறும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் சாம்சங் நிறுவனம் தான் மிகபெரிய கஸ்டமராக இருக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் ஸ்மார்ட்போனில் மூன்று எல்.இ.டி பேனல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஒவ்வொன்றும் 3.5 இன்ச் உடையதாக இருக்கும் என்றும், முன்பக்கம் இணையும் இரண்டு பாகங்கள் இரண்டு 3.5 இன்ச் பேனலாகவும், மூன்றாவது பேனல் பின்பக்கம் இருந்து இணைந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 பற்றிய முந்தைய அறிக்கைகள், சாம்சங் சப்ளையர் நிறுவனங்களுடன் பங்குபெற விரும்புகிறது என்று தெரிவிக்கின்றன, மேலும் அறிமுகமாகவிருக்கும் இந்த மாடல் டிஸ்ப்ளேவில் பிங்கர் பிரிண்ட் சென்சார் கண்டிப்பாக இருக்குக்ம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications