விற்பனையில் 10 மில்லியனை எட்டும் கேலக்ஸி எஸ்-3!

வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் கடந்த மே 3-ஆம் தேதி லண்டனில் அறிமுகமானது.
கேலக்ஸி வரிசையில் மொபைல் மார்கெட்டை கலக்கிய கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா? என்ற கேள்வியை எழுப்பிய இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 31-ஆம் தேதி வெற்றிகரமாக இந்தியாவில் வெளியிடபட்டது.
இதன் தொழில் நுட்பம் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருவதால், அதிக வரவேற்பினையும் பெற்றுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ராக்கெட் வேகத்தில் போய்கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் பற்றி சாம்சங் நிறுவனம் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து இரண்டு மாதம் கூட முழுமையாக முடியவில்லை.
வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், அடுத்த மாதம் விற்பனையில் 1 கோடியை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 2 மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் 1 கோடி விற்பனையை எட்டும் என்றால் அது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications