மிரட்டலான புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் தனது Galaxy Unpacked 2020 ஈவென்ட் நிகழ்வை இன்று இரவு நிகழ்த்தியுள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வின் போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி இசட் போல்ட் 2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி Unpacked 2020 நிகழ்வு

இந்த பிரமாண்டமான சாம்சங் கேலக்ஸி Unpacked 2020 நிகழ்வு சாம்சங்கின் ஆன்லைன் சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிமுக வெளியீட்டு நிகழ்வு இரவு 7:30 மணி IST தொடங்கி நடைபெற்றது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு படி, இது சாம்சங் குளோபல் நியூஸ்ரூம், சாம்சங்.காம் மற்றும் சாம்சங் குளோபலின் பேஸ்புக் பக்கம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன்

தற்பொழுது அறிமுகமாகியுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் சாதனத்தின் சிறப்பம்சம், அதன் விலை விபரங்கள் மற்றும் வேரியண்ட் மாடல்கள் போன்ற தகவல்களை இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஸ்மார்ட்போன் பற்றி பல லீக்ஸ் தகவல்கள் இதற்கு முன்பு வெளியானது. ஆனால், இப்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட உண்மை தகவல்களைப் பார்க்கலாம்.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

 • 6.7' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி-ஓ ஃபிளாட் டிஸ்பிளே
 • குவால்காம் ஸ்னாப் டிராகன் 865 சிப்செட்
 • 5ஜி மற்றும் 4ஜி இணைக்கம்
 • புதிய S பென் ஸ்டைலஸ்
 • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
ட்ரிபிள் கேமரா அமைப்பு
 • ட்ரிபிள் கேமரா அமைப்பு
 • 12 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
 • 12 மெகா பிக்சில் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
 • 64 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ உடன் கூடிய 3x ஸ்பேஸ் ஜூம்
 • 10 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
 • IP68 சான்று
 • Qi வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
 • 4,300 எம்.ஏ.எச் பேட்டரி

சாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்! கம்மி விலையில் சியோமி Mi TV ஸ்டிக் நம்பி வாங்குங்கள்!சாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்! கம்மி விலையில் சியோமி Mi TV ஸ்டிக் நம்பி வாங்குங்கள்!

விலை

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் 5ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் தோராயமாக ரூ. 75,400 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 5ஜி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.92,800 என்ற விலையில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிறீன், மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Galaxy Note20 Launched With PlusInfinity-O Display Know The Price, Specification And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X