கேலக்ஸி நெக்ஸஸ் ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்:சாம்சங் அறிமுகம்

Posted By: Staff
கேலக்ஸி நெக்ஸஸ் ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்:சாம்சங் அறிமுகம்
பல இடங்களில் மின்னனு சாதனங்களை வெளியிட்டு தனது பெயரை சிறந்த முறையில் நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது சாம்சங் நிறுவனம். தற்சமயம் கேலக்ஸி நெக்சஸ் என்ற ஸ்மார்ட்போனை உலக்த்தின் பல நாடுகளில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலும் இந்த ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்த புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இது ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதனால் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

சிறந்த புதிய தொழில் நுட்பங்களில் ஸ்வைப் தொழில் நுட்பத்தினை குறிப்பிடலாம். இந்த ஸ்வைப் தொழில் நுட்பம் முதல் முதலில் சாம்சங் நிறுவனத்தின் மூலம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்பாகிய கேலக்ஸி நெக்சஸில் இந்த ஸ்வைப் வசதி இல்லை.

இது நிச்சயம் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கலாம். சாதாரணமாக டைப் செய்வதைவிட, ஸ்வைப் வசதி உள்ள ஸ்மார்ட்போனில் டைப் செய்வது மிகவும் எளிதான விஷயம்.

இதனால் குறைந்த நேரத்தில் வேகமாக டைப் செய்யலாம். பெரும்பாலும் மெசேஜ் டைப் செய்வது இளைஞர்கள் தான். இந்த ஸ்வைப் தொழில் நுட்பம் அதிக செய்திகளை மெசேஜ் செய்வதன் மூலம் பரிமாறி கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான ஒன்று.

ஸ்வைப் வசதி இருந்தால் ஆங்கிலத்தில் டைப் செய்யும் போது எந்த விதமான இலக்கணப் பிழையும் வர வாய்ப்பு இருக்காது. இனி வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்வைப் வசதி பற்றி சாம்சங் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot