விரைவில்: அசத்தலான கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் வரும் ஜீன் மாதம் 11-ம் தேதி தனது கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும்.

கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவரும்
கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவா கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்ற ஸ்மார்ட்போன்களை சற்று வித்தியசமான வடிவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

1080 பிக்சல் திர்மானம்
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா
கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா உள்பட மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, பின்பு ஒற்றை செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்40 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்.


Click it and Unblock the Notifications