மீண்டும் டூயல் கேம் அமைப்புடன் சிக்கிய கேலக்ஸி சி7 (2017).!
இந்த திட்டத்தை கைவிட்டு, மற்றொரு ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர், அவ்வபோது லீக்ஸ் தகவல்களை வழங்கும் நன்கு அறியப்பட்ட ட்விட்டர் அடிப்படையிலான லீக்ஸ் தகவல் ஒன்றின்கீழ் கேலக்ஸி சி7 (2017) ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்புடன் வரும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்போது, கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது டிஇஎன்ஏஏ (TENAA) சீன சான்றிதழ் ஆணையத்தின் தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதிலும், கேலக்ஸி சி7 (2017) அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சார்ந்த இதர அம்சங்கள் சார்ந்த கேள்விகளுக்கு பத்தி அளிக்கவில்லை என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் இந்த சாதனம் மிகவும் எதிர்பார்க்கும் வண்ணம், ஒரே அளவிலான இரண்டு கேமரா சென்சார்கள் கொண்டு வரும் என்பதை தெளிவாக கூறியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் நோட் 8 மற்றும் கேலக்ஸி ஜே7 (2017) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது. ஆனால் கேலக்ஸி சி7 எப்போது வெளியாகும் மற்றும் அதன் போர்டில் ஒரு இரட்டை கேமரா சென்சார் செயல்படுத்தபட்டுள்ளது பற்றிய உத்தியோகபூர்வ வார்த்தை இல்லை. இந்த திட்டத்தை கைவிட்டு, மற்றொரு ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான், அது கேலக்ஸி சி7 ஸ்மார்ட்டனின் சீன மாறுபாட்டில் (2017) ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டு பார்க்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் சீன சான்றிதழ் தலத்தில் பாடி சார்ந்த சான்றிதழை கடந்து விட்டதாக தெரிகிறது. எனவே சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம். எனினும், அதன் தொடக்க விழா சார்ந்த குறிப்பிட்ட தேதி ஏதும் இல்லை.
வரவிருக்கும் சி7 (2017) ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் சார்ந்த விடயங்கள் மர்மமாக இருக்கும் போது, கேலக்ஸி சி7 (2016) ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கும் போது அக்கருவி ஒரு ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி செயலி கொண்டு இயங்கும் 4ஜிபி ரேம் மற்றும் ஒரு 5.7 அங்குல சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி, ஒரு 16எம்பி ரியர் கேமரா மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. எதிர்வரும் சி7 (2017) -ல் ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி போன்ற மேம்பட்ட செயலியை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications